உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இடது சோணையறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விளக்கத்தை பேச்சு:இடது வெண்ட்டிரிக்கிள் பக்கத்தில் தந்துள்ளேன். நன்றி. --தாரிக் அஸீஸ்  உரையாடுக  01:19, 8 பெப்ரவரி 2012 (UTC)

கட்டுரையானது இடது சோணையறை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. --மதனாஹரன் (பேச்சு) 04:35, 10 மார்ச் 2012 (UTC)
மதன், சோணை என்றால் இதயமா? சோ என்றால் சிவப்பு. சோணம் என்றாலும் சிவப்பு என்று அறிவேன். சோணை என்றால் பெரிய ஓட்டை (மண்வெட்டியின் காம்பு சொருகும் இரும்பு வளையம்), பெரிய காது (காது மடல் சூழ்ந்த ஓட்டை) என்று அறிவேன், ஆனால் சோணை என்றால் இதயம் என்று நான் கேள்விப்பட்டதில்லை. இலங்கை வழக்காக இருப்பின், விளக்கிச் சொன்னால் அறிந்துகொள்வேன். நன்றி. --செல்வா (பேச்சு) 13:38, 10 மார்ச் 2012 (UTC)
ஆம், நானும் இது வரை கேள்விப்பட்டதில்லை. --சிவக்குமார் \பேச்சு 10:49, 20 ஏப்ரல் 2012 (UTC)
இது இலங்கையில் பாட நூல்களில் ஏற்படுத்தப்பட்ட தவறான மொழிபெயர்ப்பு. Atrium என்பதை சோணையறை என்று குறிப்பிடுகின்றனர். (இவ்வாறே நானும் படித்தேன்!). atrium - மேல் இதயவறை என்று அழைக்கப்படல் வேண்டும், மேல் இதயவறையில் ஒரு சிறிய நீட்டம் காணப்படும் இது auricle என அழைக்கப்படுகின்றது - இதுவே சோணையறை என்று அழைப்பதற்கு உகந்தது.--சி.செந்தி (உரையாடுக) 02:07, 17 மே 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இடது_சோணையறை&oldid=2289743" இலிருந்து மீள்விக்கப்பட்டது