இடது சோணையறை (தமிழக வழக்கு: இடது ஏட்ரியம் அல்லது இடது ஆரிக்கிள்) மனித இதயத்தின் நான்கு அறைகளில் ஒன்றாகும். இது பிராணவாயு நிறைந்த இரத்தத்தை நுரையீரல் சிரையில் இருந்து பெறுகிறது. பின் இதனை இடது இதயவறைக்கு அனுப்புகிறது.