பேச்சு:ஆவூர் (திருவண்ணாமலை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையின் தலைப்பு ’ஆவூர் வேட்டவலம்’ என்றும் கட்டுரைக்குள் ’ஆவூர்’ என்றும் உள்ளதே? தலைப்பில் வேட்டவலம் அடைப்புக்குறிக்குள் வரவேண்டுமா?--Booradleyp1 (பேச்சு) 09:43, 14 சூன் 2013 (UTC) நிச்சயமாக...... சுட்டி காட்டியமைக்கு நன்றி ரோஹித் 07:03, 15 சூன் 2013 (UTC)[பதிலளி]

ஆவூர் நகரை நீங்கள் கிராமமாக மாற்றி அமைத்திருப்பதை கண்டேன் . 5,000 மக்கள் தொகைக்கு மேல் பட்ட கிராமம்கள் , 50,000 ரூபாய்க்கு மேல் வருவாய்யுள்ள கிராமம்கள் " புள்ளியியல் நகரம்" என்று கணக்கீட்டு துறையால் வழங்கபடுகி றது . ஆதலால் அதை" நகரம் " என்று குறிப்பிட்டேன் .

ஆவூரின் மக்கள் தொகை 8 ,000 வருவாய் 67,500 . ரோஹித் 07:09, 15 சூன் 2013 (UTC)

பொதுவாக வழக்கில் ’நகரம்’ என்பது புள்ளியியல் நகரத்தைக் குறிக்காது. அரசு இணையதளம் ஆவூரைக் கிராமம் என்றுதான் அறிவிக்கிறது. நீங்கள் மேலே தரும் புள்ளிவிவரங்களுக்கு ஆதாரம் உள்ளதா? நீங்கள் தரும் விபரங்களுக்கு ஆதாரங்கள் முக்கியமானவை. தலைப்பில் வேட்டவலம் சேர்த்துள்ளது ஏன் என்று தெரிவிக்க முடியுமா?--Booradleyp1 (பேச்சு) 15:51, 15 சூன் 2013 (UTC)[பதிலளி]

ஆவூர் என்ற பெயரில் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு நகரம் இருப்பதால் , வடாற்காட்டில் உள்ள இந்த ஆவூருக்கு , வேட்டவலத்திற்கு அண்மையில் உள்ள "ஆவூர்" என்பதை குறிக்கும் பொருட்டு "ஆவூர் வேட்டவலம்" என பெயரிட்டேன் . ரோஹித் 03:00, 16 சூன் 2013 (UTC)

நன்றி, ஆவூர் (திருவண்ணாமலை) என்ற தலைப்பு இன்னும் பொருத்தம். வேட்டவலத்தை விட திருவண்ணாமலை நன்கறியப்பட்ட ஊர்.--Booradleyp1 (பேச்சு) 04:04, 16 சூன் 2013 (UTC)[பதிலளி]