பேச்சு:அரிவாள்மணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரிவாள்மணையா அல்லது அரிவாள்மனையா?. நான் இதுநாள் வரை அரிவாள்மனை என்றே நினைத்திருந்தேன். --சிவக்குமார் \பேச்சு 18:34, 19 ஜனவரி 2010 (UTC)

அரிவாள்மனையே சரியான சொல்லாக நானும் உணர்கிறேன். பொதுவாக மனை என்று அமரும் பலகையைக் குறிப்பதுண்டு.அரிவாளுடன் அமைந்த மனை என்று அரிவாள்மனை சொல் எழுந்ததாக கருதுகிறேன்.--மணியன் 04:50, 20 ஜனவரி 2010 (UTC)தமிழ் இணையப் பல்கழக தமிழ்-தமிழ் அகரமுதலியில் அரிவாள்மணை என்றே குறிக்கப்பட்டுள்ளது.--மணியன் 04:54, 20 ஜனவரி 2010 (UTC)
அரிவாள்மணை தான் சரியானதாம். பார்க்க: [1].--Kanags \பேச்சு 10:28, 20 ஜனவரி 2010 (UTC)


அரிவாள்மணை என்பது சரிதான். "மணை" என்பது இருப்பதற்கான பலகையைக் குறிக்கும். தமிழ் லெக்சிக்கனில் "மணை" என்பதற்குத் தரப்பட்டுள்ள பொருளைக் கீழே பார்க்கவும்.

மணை¹ maṇai
, n. perh. மண்ணு-. [K. maṇe.] 1. Low, wooden seat; ஆசனப்பலகை. நூலே கரக முக்கோல் மணையே (தொல். பொ. 626). 2. Low, earthen dais; மணமேடை

மயூரநாதன் 15:07, 20 ஜனவரி 2010 (UTC)

அரிவாள்மணை என்பதே சரி. பார்க்க. வப்ரீயசின் தமிழ் ஆங்கில அகராதி [2] --பரிதிமதி 15:44, 20 ஜனவரி 2010 (UTC)

அனைவரது விளக்கங்களுக்கும் நன்றி. --சிவக்குமார் \பேச்சு 18:42, 26 பெப்ரவரி 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அரிவாள்மணை&oldid=488157" இருந்து மீள்விக்கப்பட்டது