அரிவாள்மணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ள அரிவாள்மணை ஒன்று

அரிவாள்மணை என்பது தமிழர் சமையலறைகளிலும், பிற இந்தியச் சமையலறைகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு கருவி ஆகும்.[1] இதை, அரிவாள், அருவாமணை போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு.


பயன்பாடும் அமைப்பும்[தொகு]

பொதுவாகக் காய்கறிகளை நறுக்குவதற்கும், பிற உணவுக்கான பொருட்களை வெட்டுவதற்கும் இது பயன்படுகின்றது. பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்ட ஒரு ஒடுங்கிய செவ்வகவடிவான பலகையும் அதன் ஒரு முனைக்கருகில் நிலைக்குத்தான நிலையில் பொருத்தப்பட்ட இரும்பாலானதும், சுமார் ஒரு அடி நீளம் கொண்டதுமான வெட்டும் அலகும் சேர்ந்ததே அரிவாள்மணை.

மரபுவழிச் சமையல்[தொகு]

இதனைப் பயன்படுத்துவோர் இதை, பலகை கிடையாகவும் வெட்டும் அலகு நிலைக்குத்தாகவும் இருக்கும்படி நிலத்தில் வைத்துப் பலகை மீது இருந்துகொண்டு வெட்டுவர். மரபுவழிச் சமையல் அறைகளில் நிலத்திலிருந்தே பெரும்பாலான சமையல் வேலைகள் செய்யப்பட்டதால் இது ஒரு வசதியான கருவியாக இருந்தது.

தற்காலச் சமையல்[தொகு]

தற்காலச் சமையலறைகளில் நின்றுகொண்டே சமைப்பதால், அரிவாள்மணை வசதியானதாக அமைவதில்லை. இதனால் முன்னர் அரிவாள்மணை கொண்டு செய்த வேலைகளைத் தற்போது கத்தியைப் பயன்படுத்திச் செய்கின்றனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிவாள்மணை&oldid=2186434" இருந்து மீள்விக்கப்பட்டது