பேச்சு:அப்பாச்சி டாம்கேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என்னுடைய மைக்ரோசாஃப் XPயின் தமிழ் பதிப்பு Webserver என்பதை வலைசேவகன் என காட்டும். (செர்வர்-சேவகன்) எனவே தான் வெப்செர்வர் என்பதை வலைசேவகன என் மொழிப் பெயர்த்துள்ளேன். ரொம்கட் எப்படி Tomcat ஆகும் என்பது எனக்கு புரியவில்லை.ரொம்கட் என்பதைவிட டாம்கேட் என்பதே சரியாக இருக்கும் என் எனக்கு தோன்றுகிறது. ர என்பதை rஐ குறிக்கிக்ககூடியாதகையால் பக்கத்தை நகர்த்தி உள்ளேன் வினோத் 18:07, 23 நவம்பர் 2007 (UTC)

வினோத், விண்டோஸ் எக்ஸ்பி தமிழ்பதிப்பு நான் பாவிக்கும் ஆர்க்ஜிஐஎஸ் மென்பொருளுடன் குழப்பத்தை உண்டுபண்ணியதால் அகற்றிவிட்டேன் மீளப்பாவிக்கும் எண்ணம் தற்போது இல்லை. விரும்பினால் நீங்கள் விண்டோஸ் மொழி இடைமுகப் பொதி கட்டுரையையும் மேம்படுத்தலாம். ரொம்கட், டாம்கேட் எல்லாம் அவரவர் உச்சரிப்பதைப் பொறுத்ததே. வெப்சேவரை இணையவழங்கி என்றவாறும் தமிழ்ப்படுத்துகின்றார்கள்.--உமாபதி 18:16, 23 நவம்பர் 2007 (UTC)

வினோத், ரொம்கட் என்பது இலங்கையில் இந்தப் பெயரை எழுதும் வழக்கு. இந்த விசயத்தில் இது வரை தமிழ் விக்கிபீடியாவில் நிகழ்ந்த உரையாடல்கள் தெளிவான வழிகாட்டு எதையும் அடைய இயலாமல் இருக்கிறது :( server என்பதற்கு வழங்கி என்று சொல்வது இன்னும் நல்ல தமிழாக்கமாக இருக்கும்--ரவி 18:54, 23 நவம்பர் 2007 (UTC)

ஆம். ஆர்க்வியூ ஆர்கின்ஃபோ எல்லாம் குழப்பம் பிடித்த மென்பொருட்கள் தான். 6-7 வருடங்களுக்கு முன்பு நான் Tam,Tab,Tsc எழுத்துருக்கள் பயன்படுத்திய காலத்திலேயே , வ்ரைபட சின்னங்களுக்கு(Cartographic Symbols) பதிலாக இந்த எழுத்துருக்களின் Extended Latin அட்டவணையை சேர்த்துக்கொண்டு தமிழ் எழுத்துக்கள் காட்டி குழப்பத்தை ஏற்படுத்தியது.என் அம்மாவிடம் நான் திட்டு வாங்கியதுதான் மிச்சம்.(அவர்களுடைய ப்ராஜெக்டில் உதவி செய்து பிரய்ச்சித்தம்(!) தேடிக்கொண்டேன் என்பது வேறு விஷயம்!!!!!!!). வினோத் 04:08, 24 நவம்பர் 2007 (UTC)