அப்பாச்சி டாம்கேட்
உருவாக்குனர் | அப்பாச்சி சாப்ட்வேர் பவுண்டேசன் |
---|---|
அண்மை வெளியீடு | 6.0.14 / மே 15, 2007 |
இயக்கு முறைமை | பல் இயங்குதளம் |
மென்பொருள் வகைமை | Web Container |
உரிமம் | Apache 2.0 Licence |
இணையத்தளம் | அப்பாசி டாம்கேட் |
அப்பாச்சி டாம்கேட் (இலங்கை வழக்கு: ரொம்கட்) ஆனது அப்பாசி சாப்ட்வேர் பவுண்டேசனின் ஓர் வலை சேவகன் ஆகும். சண் மைக்ரோசிஸ்டத்தின் விதிமுறைகளுக்கமைய ஜாவா செர்வ்லெட் மற்றும் ஜாவா செர்வர்பேஜஸ் ஆகியவற்றை வலை சேவகனிலேயே இயக்கக்கூடிய வசதியுள்ளது. எக்ஸ்எம்எல் முறையிலான கோப்புக்களினால் விருப்பத்திற்கேற்றவாறு இவ் இணையவழங்கியை நிர்வாகிக்கமுடியும். டாம்கேட் தன்னுடைய இணைய வழங்கியைக் கொண்டுள்ளது.
விருத்தி நிலை
[தொகு]அப்பாச்சி சாப்ட்வேர் பவுண்டேசனின் அங்கத்தவர்களும் தன்னார்வலர்களும் சேர்ந்தே டாம்கேட்டை விருத்தி செய்து பராமரிக்கின்றனர். பயனர்கள் அப்பாச்சி அனுமதி மூலம் மூலநிரலையும் இருமத்தையும் பெற்றுக்கொள்ளலாம். டாம்கேட்டின் பதிப்பானது 3.0.x உடன் ஆரம்பிக்கின்றது. (இதற்கு முந்தியவை சண்மைக்ரோசிஸ்டத்தின் உட்பாவனைக்கென உருவாக்கப்பட்டது வெளியில் விடப்படவில்லை). டாம்கேட் 6.0.14, 6.0.x வரிசையில் வரும் பதிப்புக்களின் ஆகப்பிந்தைய வினைத்திறனான பதிப்பாகும்.[1] இது சேர்வ்லெட் 2.5 ஐ ஆதரிக்கின்றது.[2], 2007.
நிறுவுதல்/அடிப்படைச் செயற்பாடுகள்
[தொகு]உபுண்டு
[தொகு]பின்வரும் விபரம் டாம்கேட் 6 க் ஆனது. பிறவு வெளியீடுகளும் இதைப் போன்ற ஒரு படிமுறையையே பின்பற்றும்.
apt-get install tomcat6 apt-get install tomcat6-admin apt-get install tomcat6-docs apt-get install tomcat6-examples
உபுண்டுவில் நிர்வாகிப் பயனரை /etc/tomcat6/tomcat-users.xml சென்று பின்வருமாறு சேர்த்து, பின்னர் டாம்கேட்டை மீண்டும் துவக்க வேண்டும்.
<role rolename="manager-gui"/> <role rolename="manager-status"/> <user name="admin" password="admin" roles="manager-gui, manager-status"/>
sudo /etc/init.d/tomcat6 restart sudo /etc/init.d/tomcat6 status
உசாத்துணைகள்
[தொகு]- ↑ "Apache Tomcat 6 Downloads". Apache Software Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-03-14.
- ↑ "Apache Tomcat -- Which Version Do I Want?". Apache Software Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-01-22.