ஆர்க்ஜிஐஎஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்க்ஜிஐஎஸ் (ArcGIS) எஸ்றி (ESRI) நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட புவியியற் தகவற் தொழில் நுட்ப மென்பொருளாகும். ஆக்ஜிஐஎஸ் ஆக்றீடர்(ArcReader) ஊடாக ஆர்க்வியூ போன்ற மென்பொருட்களூடாக உருவாக்கப்பட்டத் பார்பதற்கும் கேள்விகளைக் (Query) கேட்டு மறுமொழிகள் பெறவும் உதவுகின்றன. ஆக்எடிற்றர் ஆக்வியூவின் எல்லாப் பிரயோகங்களையும் (பயன் முறைகளையும்) கொண்டுள்ளது. இதில் மேம்படுத்தப் பட்ட கருவிகளூடாக ஷேப் கோப்புக்களையும் (Shape Files) மற்றும் நிலவுருண்டையின் தகவல் கிடங்குகளைப் (ஜியோடேற்றாபேசஸ்களையும் (GeoDatabases)) பயன்படுத்தும் வசதி கொண்டது. ஆர்கின்போ ஆர்க்ஜிஐஎஸ்ஸின் மிகவும் கூடுதலான வசதிகளைக் கொண்ட மென்பொருளாகும். இதில் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல், தரவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற வசதிகள் உண்டு. வழங்கி (சேவர்) முறையிலான ஆர்க்ஜிஐஎஸ் தயாரிப்புக்களும் உள்ளங்கைக் கணினிகளில் பாவிக்ககூடிய ஆர்க்ஜிஐஎஸ் மென்பொருட்களும் உண்டு.

மென்பொருள் விபரங்களும் சரித்திரங்களும்[தொகு]

பெப்ரவரி 2007 இன்படி மிகவும் அண்மைய பதிப்பு ஆர்க்ஜிஐஎஸ் 9.2 ஆகும். இதன் 9.2 பதிப்பின் பீட்டவானது (beta) வெளிவிடப்பட்டு சோதனைகள் முடிவடைந்து 9.2 இன் இறுதிப்பதிப்பானது 2006ஆம் ஆண்டில் இறுதியில் வெளிவிடப்பட்டது. இது பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக நேரடியாகவே ஆள்கூறொன்றைத் தந்தால் அந்தவிடத்திற்குச் செல்லும் வசதி. கூகிள் ஏர்த் மென்பொருட்களுடான போட்டிகளே இப்புதிய வசதிகளை அறிமுகப்படுத்தக் காரணம் என நம்பப்படுகின்றது.

இன்று ESRI நிறுவனத்தார் வெளிவிடுகின்றன மென்பொருட்களே உலகின் புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன. ஆய்வுகளின் படி புவியியற் தகவற் தொழில் நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுபவர்களில் உலகில் 77% பயனர்கள் ESRI மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் [1]

பொதுவான பிழைகளைச் சரிசெய்தல்[தொகு]

பொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் நியம அலகு மொழியாகத் தமிழ் அல்லது ஏனைய இந்திய மொழிகளுடன் ஆர்க்ஜிஐஎஸ் சரிவர இயங்காது.இதைச் சரிசெய்வதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் [2]. ஆனால் இவ்வழுவானது தமிழையோ ஏனைய இந்திய மொழிகளைகளையோ தனது தேசப்படங்களில் ஆதரிக்காது என்பதல்ல. இவை யாவும் ஒருங்குறியூடாக இலகுவாக ஆதரிக்கப்படும். இவ்வசதியானது ஆர்க்வியூவில் இல்லை என்பதனையும் கவனிக்க.

உசாத்துணைகள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்ஜிஐஎஸ்&oldid=3414601" இலிருந்து மீள்விக்கப்பட்டது