உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்மி (அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெர்மி (fermi) என்பது நீளத்துக்கான SI அலகுத் தீட்டமல்லாத ஒரு அலகாகும். ஆனாலும், இது SI-அலகான பெம்டோமீட்டருக்கு இணையானதாகும். fm, மற்றும் பெம்டோமீட்டர் ஆகிய இரண்டு பெயர்களும் பிரபல அறிவியல் அறிஞரான என்ரிக்கோ பெர்மியின் நினைவாக சூட்டப்பட்டது. இவ்வலகு பொதுவாக அணுக்கருவியலில் ஒரு முக்கிய அலகாகும்.

வரைவிலக்கணம்

[தொகு]
1 பெர்மி = 1.0 x 10–15 மீட்டர்கள் = 1 பெம்டோமீட்டர் = 0.001 பைக்கோமீட்டர் = 1000 ஆட்டோமீட்டர்கள்
1,000,000 பெர்மிகள் = 1 நானோமீட்டர்

எடுத்துக்காட்டாக, தங்கத்தின் அணுக்கருவின் ஆரம் கிட்டத்தட்ட 8.45 பெர்மிகள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்மி_(அலகு)&oldid=1449812" இலிருந்து மீள்விக்கப்பட்டது