பெருவயல் ரெணபலி முருகன் கோயில்
பெருவயல் ரெணபலி முருகன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | இராமநாதபுரம் |
அமைவிடம்: | பெருவயல், தேவிப்பட்டினம் வழி |
மக்களவைத் தொகுதி: | இராமநாதபுரம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | ரணபலி முருகன் (அ) சிவசுப்பிரமணியசுவாமி |
தாயார்: | வள்ளி-தெய்வானை |
சிறப்புத் திருவிழாக்கள்: | மாசி தேரோட்டம், கந்தசஷ்டி விழா |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினெட்டாம் நூற்றாண்டு |
அமைத்தவர்: | வைரவன் சேர்வைக்காரன் |
பெருவயல் ரெணபலி முருகன் கோயில் அல்லது பெருவயல் சிவ சுப்பிரமணியசுவாமி கோயில் என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே உள்ள பெருவயலில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயிலாகும்.
வரலாறு
[தொகு]ரெணபலி முருகன் கோயிலானது கட்டயத்தேவர் என்ற குமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் (கி.பி. 1728-1735) முதலமைச்சரான (பிரதானி) வைரவன் சேர்வைக்காரனால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலுக்கு 1736 இல் குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி பெருவயல் கலையனூர் என்ற சிற்றூரை கொடையாக அளித்துள்ளார். இக்கோயில் தூண் போதிகையில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216-1244) ஆட்சிக் காலத்திய கல்வெட்டு காணப்படுகிறது. இக் கல்வெட்டு அமைந்துள்ள போதிகை இந்த ஊரில் இருந்த அழிந்தோபோன ஒரு கோயிலில் இருந்து இக்கோயிலைக் கட்ட பயன்படுத்தபட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுகின்றர்.[1]
அமைப்பு
[தொகு]இக்கோயிலானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முன்புறம் ஐந்துநிலை இராச கோபுரம் அமைந்துள்ளது. இராச கோபுரத்தைக் கடந்தால் ஜெய்கொண்ட விநாயகரைக் காண இயலும். அவரைத் தாண்டினால் பலிபீடம், கொடிமரம், மயில் வாகனம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்தால் கருவறையைக் காண இயலும். கருவறையில் வள்ளை தெய்வாணையுடன் ரணபலி முருகன் உள்ளார். கோயில் பிரகாரத்தில் இராமநாதசுவாமி, பர்வதவர்தினி, சண்முக சக்கரம், நாகர் ஆகியோரைக் காணலாம்.[2]
வழிபாடு
[தொகு]ரெணபலி முருகன் கோயிலில் நாள்தோறும் நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசியில் தேர்த்திருவிழா நடக்கிறது. கந்தசஷ்டி விழாவும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தேவிபட்டினம் அருகே 800 ஆண்டுகள் பழமையான மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு". Kamadenu (in ஆங்கிலம்). 2024-10-07. பார்க்கப்பட்ட நாள் 2024-10-13.
- ↑ "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-13.
{{cite web}}
: Text "-" ignored (help); Text "Tamilnadu Temple" ignored (help); Text "சிவ சுப்பிரமணியசுவாமி (ரணபலி முருகன்)" ignored (help)