உள்ளடக்கத்துக்குச் செல்

பெருஞ் சாரணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருஞ் சாரணர் (Rover Scout) என்பது வயது வந்த ஆண்கள், பெண்களுக்கான சில சாரணர் அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு திட்டமாகும். பெருஞ் சாராணர் குழு 'பெருஞ்சாரணர் படையணி' என்று அழைக்கப்படுகிறது.

விடலைப்பருவ இளைஞர்களுக்கு ஒரு திட்டத்தை வழங்குவதற்காக 1918 இல் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சாரணர் சங்கம் பெருஞ்சாரணர் இயக்கத்தினை உருவாக்கியது. இது பல சாரணர் அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தோற்றம்[தொகு]

முதல் திட்டம், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சாரணர்களை இலக்காகக் கொண்டு, "சாரணர்கள்" என்று அழைக்கப்பட்ட இயக்கம் மார்ச் 1917 இல் முதலாம் உலகப் போரின் போது தொடங்கப்பட்டது. போர்க்காலத்தில் போதுமான வயது வந்த ஆண் தலைவர்கள் இல்லை என்பது விரைவில் வெளிப்பட்டது, இரண்டாவது திட்டம், மேற்கு முன்னணியின் பின்பகுதிகளில் பிரித்தானியப் பேரரசு வீரர்களின் பொழுதுபோக்கிற்காக வழங்கப்பட்ட 'போர்க்கள சாரணர் குடிசைகளின்' தொடர்ச்சியாகும். இந்தத் திட்டங்களில் இருந்து, இளைஞர்களுக்காக சாரணர் தொடர்பான திட்டம் தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது.[1]

1918 இல் பிரிட்டனில் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து பெருஞ்சாரணர் இயக்கமானது பல நாடுகளுக்கும் பரவியது, இருப்பினும் அது சாரணர் இயக்கத்தில் இடம்பெறவில்லை. தற்போது, பெருஞ் சாரணர் பிரிவு பல ஐரோப்பிய நாடுகளில், காமன்வெல்த் நாடுகளின் பெரும்பாலான உறுப்பு நாடுகளில் (எ.கா., கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஆங்காங்) இந்த இயக்கம் மத்திய, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, அயர்லாந்து, ஜப்பான், சீன குடியரசு / தைவான், இந்தோனேசியா, தாய்லாந்து, கொரியா போன்ற பல நாடுகளில் சாரணர் அமைப்புகளின் முக்கியமான திட்டமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குரிப்பாக, ஈஸ்டர் விடுமுறை வார இறுதியில் சர்வதேச பங்கேற்பாளர்கள் தேசிய அளவிலான கூட்டத்தினை நடத்துகிறார்கள்.

வயது[தொகு]

1922 இல் பேடன் பவல் தனது ரோவரிங் டூ சக்சஸ் எனும் நூலில் "பெருஞ் சாரணரில் இணைவதற்கு உங்களுக்கு 17 வயதினை நிறைவடைந்திருக்க வேண்டும் ,18 வயது சரியானதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Walker, Colin. "Rover Scouts - Scouting for Men". scoutguidehistoricalsociety.com. Scouting Milestones. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.
  2. Baden-Powell, Robert (October 1959) [1922]. Rovering to Success: A guide for young manhood. London: Herbert Jenkins.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருஞ்_சாரணர்&oldid=3954315" இலிருந்து மீள்விக்கப்பட்டது