பெருங்கட்டூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெருங்கட்டூர்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்5,000
மொழி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு604402

பெருங்கட்டூர் (perungathur) தமிழ்நாடு மாநிலம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் புறநகர் பகுதியில் உள்ள ஒரு கிராமமாகும். கோயில் நகரமாக அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஆனது பெருங்கட்டூரில் இருந்து  24 கி.மீ தொலைவில் உள்ளது.[1]

மக்கள் தொகை[தொகு]

இந்த கிராமத்தில் சுமார் 5000 மக்கள் வசிக்கின்றனர். இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல் படி 2500 வாக்காளர்கள் உள்ளன. அதில் 1200 ஆண் வாக்காளர்களும் மற்றும் 1300 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

திருவிழாக்கள்[தொகு]

இந்த கிராமத்தில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அதில் முக்கிய திருவிழாக்கள் ஆடி திருவிழா (மாரி அம்மன் மற்றும் பொன்னி அம்மன்) மற்றும் ஒவ்வொரு சனவரி 17 அன்று முத்து மாரி அம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்படுகின்றது.

வசதிகள்[தொகு]

இக்கிராமத்தில் 25 படுக்கை வசதிக் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. இக்கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் சாதாரண சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் அனைத்துப் பிற நோய்களுக்கும் மருத்துவ உதவி பெறுகின்றனர்.

பெருங்கட்டூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில்  பல தொழில்முறை மற்றும் கலைக் கல்லூரிகள் உள்ளன. அத்துடன் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ளது.[2] 2003 ஆம் ஆண்டில் ஒரு திரையரங்கு இக்கிராமத்தில் அமைக்கப்பட்டது.[3]

இக்கிராமத்தில் இந்தியன் வங்கி மற்றும் தபால் நிலையம் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

இக்கிராமத்திலிருந்து அரக்கோணம் மற்றும் வேலூர் காட்பாடி ரயில் நிலையங்கள் அருகில் அமைந்துள்ளன. 

இக்கிராமத்திற்கு நன்கு இணைக்கப்பட்ட போக்குவரத்து (பேருந்து) வசதி உள்ளது. கோயம்புத்தூர், ஆற்காடு, காஞ்சிபுரம், வேலூர், செய்யார், வந்தவாசி, போளூர், திண்டிவனம் ஆகிய ஊர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்கட்டூர்&oldid=2526016" இருந்து மீள்விக்கப்பட்டது