பென்சைல்டிரைமெத்திலமோனியம் ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பென்சைல்டிரைமெத்திலமோனியம் ஐதராக்சைடு
Skeletal formula of benzyltrimethylammonium hydroxide
Ball-and-stick model of the benzyltrimethylammonium hydroxide ions
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்சைல்(டிரைமெத்தில்)அசானியம் ஐதராக்சைடு
வேறு பெயர்கள்
டிரைட்டன் பி, டிரைமெத்தில்பென்சைலமோனியம் ஐதராக்சைடு, என்,'என்,'என்-டிரைமெத்தில்-1-பீனைல்மெத்தனாமினியம் ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
100-85-6 Yes check.svgY
ChemSpider 60218 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66854
UNII 8P4488425W N
பண்புகள்
C10H17NO
வாய்ப்பாட்டு எடை 167.25 g·mol−1
தோற்றம் நீர்மம், தெளிவானது. இலேசான மஞ்சள்
அடர்த்தி 0.95 கிராம்/மி.லி
தண்ணீருடன் கலக்கும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பென்சைல்டிரைமெத்திலமோனியம் ஐதராக்சைடு (Benzyltrimethylammonium hydroxide) என்பது C10H17NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். டிரைட்டன் பி அல்லது டிரைமெத்தில்பென்சைலமோனியம் ஐதராக்சைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. நான்காம்நிலை அமோனியம் உப்பான இச்சேர்மம் ஒரு கரிமவேதியியல் காரமாகக் கருதப்படுகிறது. வழக்கமாக தண்ணீர் அல்லது மெத்தனாலில் உள்ள கரைசலாக இது கையாளப்படுகிறது. நிறமற்ற இச்சேர்மம் கரைசல்களில் மஞ்சளாக காட்சியளிக்கிறது [1]. நீராற்பகுப்பு வழியாக டிரைமெத்திலமீன் இருப்பதால் வர்த்தக மாதிரிகள் மீன் போன்ற நெடியுடன் காணப்படுகின்றன.

பயன்கள்[தொகு]

பென்சைல்டிரையெத்திலமோனியம் உப்புடன் பென்சைல்டிரையெத்திலமோனியம் ஐதராக்சைடைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அது ஒரு பிரபலமான தடம் மாற்றும் வினையூக்கியாகச் செயல்படுகிறது [2].

ஆல்டால் ஒடுக்க வினைகள் மற்றும் கார வினையூக்க நீர்நீக்க வினைகள் போன்றவற்றில் இதைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் ஓர்னர்-வாட்சுவொர்த்-எம்மான்சு ஒலிஃபீனேற்ற வினைகளிலும் இதை ஒரு காரமாகப் பயன்படுத்துகிறார்கள் [3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Mary Ellen Bos "Benzyltrimethylammonium Hydroxide" in Encyclopedia of Reagents for Organic Synthesis, 2001 John Wiley & Sons. எஆசு:10.1002/047084289X.rb079
  2. Marc Halpern "Phase-Transfer Catalysis" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a19_293
  3. Chaturvedi, D., & Ray, S. (2006). Triton b catalyzed, efficient, one-pot synthesis of carbamate esters from alcoholic tosylates. Monatshefte fuer Chemie, 137. Retrieved from http://www.springerlink.com/content/m48703268m3qw323/fulltext.pdf எஆசு:10.1007/s00706-005-0452-2

புற இணைப்புகள்[தொகு]

http://www.chemcas.com/AnalyticalDetail.asp?pidx=1&id=19594&cas=100-85-6&page=490