பெந்தெம் தொரபாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெந்தெம் தொரபாபு
Dorababu Pendem
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
ஆந்திரப் பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்எசு.வி.எசு.என். வர்மா
தொகுதிபிதாபுரம் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2004–2009
முன்னையவர்வீர பத்ர ராவ் சங்கிசெட்டி
பின்னவர்வங்க கீதா
தொகுதிபிதாபுரம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஒய். எசு. ஆர். காங்கிரசு கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்

பெந்தெம் தொரபாபு (Dorababu Pendem) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். ஆந்திரப்பிரதேச அரசியலில் ஒய்எசுஆர் காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். ஒய்எசுஆர் காங்கிரசு கட்சி சார்பாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு 2019 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி முதல் ஆந்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை பாரதிய சனதா கட்சியின் சார்பில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2012 ஆம் ஆண்டு ஒய்எசுஆர் காங்கிரசு கட்சியில் சேர்ந்த இவர், 2014 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் மறைந்த ஒய்.எசு. இராசசேகர் ரெட்டியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. [1] [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெந்தெம்_தொரபாபு&oldid=3834335" இலிருந்து மீள்விக்கப்பட்டது