உள்ளடக்கத்துக்குச் செல்

பெட்ரோபிராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய எரிவளி நிறுவனம் பெட்ரோனாசுடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
பெட்ரோலியோ பிரேசிலீரோ எஸ்.ஏ.
வகைஎஸ்.ஏ (பொது வரையறுக்கபட்ட நிறுவனம்)
நிறுவுகை3 அக்டோபர் 1953 (60 அகவை)
தலைமையகம்இரியோ டி செனீரோ, இசெ, பிரேசில்
சேவை வழங்கும் பகுதிஉலகெங்கும்
முதன்மை நபர்கள்மாரியா தாசு கிரகாசு பாசுட்டர் (மு.செ.அ)[1][2]
அல்மீர் குயிலெர்மெ பர்பாசா (மு.நி.அ)
தொழில்துறைஎண்ணெய் மற்றும் எரிவளி
உற்பத்திகள்பாறை எண்ணெய் மற்றும் அதன் வழிவந்தப் பொருட்கள், இயற்கை எரிவளி, மசகெண்ணெய், பெட்ரோலிய வேதிப்பொருட்கள், உரம், உயிரி எரிபொருள்
வருமானம் US$ 130.0 பில்லியன் (2013)[3]
நிகர வருமானம் US$ 10.0 பில்லியன் (2013)[3]
உரிமையாளர்கள்பிரேசிலிய அரசு (64 விழுக்காடு)[4]
பணியாளர்80,497 (2010)[3]
துணை நிறுவனங்கள்பெட்ரோபிராசு டிஸ்ட்ரிபுயிடோரா, டிரான்சுபெட்ரோ, பெட்ரோபிராசு அர்கெந்தீனா, பிராசுகெம் மற்றும் பிற.[5]
இணையத்தளம்www.petrobras.com/en

பெட்ரோலியோ பிரேசிலீரோ எசு. ஏ. (Petróleo Brasileiro S.A.) அல்லது பெட்ரோபிராசு (Petrobras) ஆற்றல் தொழிற்துறையில் பகுதி அரசுடைமையான[6] பிரேசிலிய பன்னாட்டு நிறுவனமாகும். இதன் தலைமையகம் இரியோ டி செனீரோவில் உள்ளது. தெற்கு அரைக்கோளத்தில் பங்குச்சந்தை முதலீட்டில் மிகப்பெரிய நிறுவனமாக விளங்குகிறது. 2011இல் பணவரவுகளைப் பொறுத்து இலத்தீன அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனமாக மதிப்பிடப்பட்டது.[7][8][9]

பெட்ரோபிராசு 1953இல் நிறுவப்பட்டது. 1997இலிருந்து இது பிரேசிலில் பாறை எண்ணெய், எரிவளித் துறையில் சட்டபூர்வ ஏகபோகத்தை இழந்தது. இருப்பினும் ஒருநாளைக்கு 2 பில்லியன் பேரல்கள் (320,000 மீ3) சமனான பாறை எண்ணெயை வெளிப்படுத்தும் பெட்ரோபிராசு பிரேசிலின் குறிப்பிடத்தக்க எண்ணெய் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இதற்கு பாறைநெய் தூய்விப்பாலைகளும் எண்ணெய் சரக்குப் கப்பல்களும் சொந்தமாக உள்ளன. எண்ணெய்வழிப் பொருட்களை விற்கும் முதன்மை நிறுவனமாகவும் உள்ளது. உலகில் ஆழ்நீர் மற்றும் மீயாழ்நீர் பாறைநெய் வெளிப்படுத்தலில் மேம்பட்ட தொழினுட்பத்தை கையாள்வதில் முன்னணியில் உள்ளது.[10][11]

செப்டம்பர் 2010இல், வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்கு விற்பனையாக, பெட்ரோபிராசு பிரேசிலின் பங்குச்சந்தையில் US$72.8 பில்லியன் மதிப்புள்ள தனது பங்குகளை விற்றது.[12][13] உடனடியாக பெட்ரோபிராசு இந்த விற்பனை மூலமாக சந்தைப்படுத்தல் முதலீட்டில் உலகின் நான்காவது பெரிய நிறுவனமாக ஆனது.[13][14][15] 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடன் பிரட்சனையின் காரணமாக பல தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். தற்போது நிதி நெருக்கடி தீர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. [16]

மேற்சான்றுகள்

[தொகு]
 1. Petrobras’s Foster to Replace Gabrielli as Chief Executive Business Week, retrieved 27 சனவரி 2012
 2. Romero, Simon (ஏப்ரல் 10, 2012). "Women Take the Reins of Power as Brazil's Energy Industry Expands". The New York Times. http://www.nytimes.com/2012/04/11/business/energy-environment/women-take-the-reins-of-power-as-brazils-energy-industry-expands.html. 
 3. 3.0 3.1 3.2 "2010 Form 10-K, Petróleo Brasileiro S.A." Hoover's.
 4. Brazilian government boosting Petrobras stake to 64 percent France 24. Retrieved on 2010-10-15.
 5. "Petrobras Group". Archived from the original on 2011-01-26. பார்க்கப்பட்ட நாள் 2014-06-27.
 6. "Petrobras - Investor Relations". Archived from the original on 2010-05-30. பார்க்கப்பட்ட நாள் 2014-06-27.
 7. Latin Business Chronicle
 8. http://notibiz.notiemail.com/noticias.asp?leng=en&id=2037 Notibiz
 9. Hora do Povo பரணிடப்பட்டது 2013-05-27 at the வந்தவழி இயந்திரம் (போர்த்துக்கேயம்)
 10. "The devil in the deep-sea oil". The Economist. நவம்பர் 5, 2011. http://www.economist.com/node/21536599. பார்த்த நாள்: மார்ச் 13, 2012. 
 11. Chandler, Graham (நவம்பர் 2008). "Petrobras Deepwater Discovery Success". Earth Explorer. Archived from the original on 2012-04-20. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 13, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 12. Capitalização da Petrobras Veja.com
 13. 13.0 13.1 "Petrobras Raises $70 Billion as Investors See Growth". Bloomberg Businessweek. 24 செப்டம்பர் 2010. http://www.businessweek.com/news/2010-09-24/petrobras-raises-70-billion-as-investors-see-growth.html. பார்த்த நாள்: 23 ஆகத்து 2011. 
 14. Nunca antes na história da humanidade
 15. "Capitalização da Petrobras foi a maior da história da humanidade"
 16. Petrobras Plans to Raise at Least $833 Million From Debt Issue[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்ரோபிராசு&oldid=3791440" இலிருந்து மீள்விக்கப்பட்டது