உள்ளடக்கத்துக்குச் செல்

பெஞ்சமின் புளூம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெஞ்சமின் புளூம்
Benjamin Bloom
பிறப்புபெஞ்சமின் சாமுவேல் புளூம்
(1913-02-21)பெப்ரவரி 21, 1913
லான்சுபோர்டு, பென்சில்வேனியா, அமெரிக்கா
இறப்புசெப்டம்பர் 13, 1999(1999-09-13) (அகவை 86)
சிகாகோ, இலினொய், அமெரிக்கா
கல்விப் பின்னணி
கல்வி நிலையம்
கல்விப் பணி
துறைஉளவியல்
Sub-disciplineகல்வி உளவியல்
கல்வி நிலையங்கள்சிக்காகோ பல்கலைக்கழகம்
Notable ideas
  • புளூமின் பாகுபாட்டியல்
  • புளூமின் 2 சிக்மா பிரச்சினை

பெஞ்சமின் சாமுவேல் புளூம் (Benjamin Samuel Bloom, பெப்ரவரி 21, 1913 – செப்டம்பர் 13, 1999) என்பவர் அமெரிக்கக் கல்வி உளவியலாளர் ஆவார். கற்றலில் புலமை பெறுவது தொடர்பான கருத்தியல் கோட்பாட்டில் கல்வி நோக்கங்களை வகைப்படுத்தியதில் பெரும் பங்களிப்பைச் செய்தவர் ஆவார். 1950 களின் மத்தியில் கல்வியின் விளைவுகளைக் குறித்து குறிப்பிடுவது மற்றும் மதிப்பிடுவது தொடர்பான முழுமையான மாதிரியை உருவாக்கிய கல்வியியல் உளவியலாளர்களில் முன்னோடியானவர் ஆவார். [1] இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்களின் தத்துவங்கள் மற்றும் நடைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆவார்.

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இவர் பென்சில்வேனியாவிலுள்ள, லேன்ஸ்போர்டு என்னுமிடத்தில் 12 பிப்ரவரி 1913 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது பெற்றோர் யூதர்களாக இருந்த காரணத்தால் உருசியாவில் பாகுபாட்டிற்கு ஆளாக்கப்பட்டு அதன் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள் ஆவர். [2] பென்சில்வேனியா மாநிலக் கல்லூரியில் தனது இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தை 1935 ஆம் ஆண்டு பெற்றார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் 1942 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்று அங்கேயே கல்வித்துறையில் பயிற்றுவிப்பாளராகவும் தேர்வுத்துறை உறுப்பினராகவும் பணிபுரிந்தார். இவர் 1957-ல் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு மதிப்பீடு சார்ந்த பணிமனைகள் நடத்தினார். இது இந்தியக் கல்வி முறையில் மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இவரது கல்விக்கான பங்களிப்பாக கற்றலின் வகைப்பாடு கருதப்படுகிறது.

பணிகள்[தொகு]

1956 ஆம் ஆண்டில், புளூம் கல்வியியல் நோக்கங்களின் வகைப்பாடு என்ற நூலின் முதல் தொகுதியை வெளியிட்டார். இந்த நூல் கல்வியில் கற்றல் நோக்கங்களை வகைப்படுத்தியதோடு புளூமின் வகைப்பாடு என்று பரவலாக அறியப்பட்டது. இந்த நூலே மீத்திறம் மிக்க மாணவர்களின் மனச் செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுத்ததும் அறிதல் திறன் செயல்பாடுகளை வகைப்படுத்திய முதல் அமைப்புமாகும். [3] இந்த நூல் கல்விச் சமுதாயத்திற்கு அடிப்படையானதும், அவசியமானதுமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அரால்டு ஜி சான் மற்றும் 1994 கல்வியியல் கல்விக்கான தேசியக் கழகத்தின் 1994 ஆம் ஆண்டு ஆண்டு மலர் ஆகியவை இணைந்து "1906–81 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கலைத்திட்டத்தில் தாக்கம் ஏற்படுத்திய முக்கியத்துவம் வாய்ந்த எழுத்துகள்" என்ற தலைப்பிலான கருத்துக் கணிப்பில் மேற்கூறப்பட்ட உண்மையானது வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kovalchick, Ann; Dawson, Kara (2004). Education and Technology: A-I. Santa Barbara, CA: ABC-CLIO. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1576073513.
  2. Bresler, Liora; Cooper, David; Palmer, Joy (2002). Fifty Modern Thinkers on Education: From Piaget to the Present Day. Oxon: Routledge. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 041522408X.
  3. Karnes, Frances; Nugent, Stephanie (2004). Profiles of Influence in Gifted Education: Historical Perspectives and Future Directions. Waco, TX: Prufrock Press Inc. pp. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1882664973.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஞ்சமின்_புளூம்&oldid=3582438" இலிருந்து மீள்விக்கப்பட்டது