பெங்களூர் வானியல் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெங்களூர் வானியல் சங்கம் (Bangalore Astronomical Society) என்பது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட தொழில் சாரா வானியலாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள பிற நபர்கள் சேர்ந்த ஒரு சமூக அமைப்பாகும். இச்சங்கத்தின் முதன்மை நோக்கம் வானியலை ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கை மற்றும் ஓர் அறிவியலாக ஊக்குவிப்பதும் பிரபலப்படுத்துவதுமாகும்.

வரலாறு[தொகு]

இந்த சங்கம் 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இலாப நோக்கற்ற ஓர் அமைப்பாக பதிவு செய்யப்பட்டது. ஆரம்ப நாட்களில் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆர்குட் இணையதளம் வழியாக சந்தித்துக் கொண்டனர். பின்னர் இவர்கள் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பை உருவாக்க முடிவு செய்தனர். பெங்களூர் வானியல் சங்கம் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. கூகிள் குழுக்கள் மற்றும் நட்சத்திர கூட்டங்கள் மூலம் இச்சங்கம் செயல்படுகிறது.

வேலை தத்துவம்[தொகு]

பெரும்பாலான சங்க நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகப் பணிகள் தன்னார்வலர்களால் கையாளப்படுகின்றன. இத்தன்னார்வலர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களாவர். பெரும்பாலானவர்கள் பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் அல்லது மாணவர்களாக உள்ளனர். சங்கத்தின் நடவடிக்கைகள் அல்லது நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள எவருக்கும் இச்சங்கம் வேலைவாய்ப்பையோ உதவித்தொகையையோ வழங்குவதில்லை.

நடவடிக்கைகள்[தொகு]

பெங்களூர் வானியல் சங்கத்தின் நடவடிக்கைகள் முறையே கவனித்தல், கருவிமயமாக்கல், பரவலாக எட்டிப்பிடித்தல், பட்டறைகள் மற்றும் கூட்டங்கள் போன்றவையாகும். இச் செயல்பாடுகள் பொதுவாக அனைவருக்கும் திறந்திருக்கும். சங்கம் தன் உறுப்பினர்களை வானியல் பிரபலப்படுத்துவதற்கும் மேம்பாட்டு முயற்சிகளில் ஈடுபடவும் தன்னார்வத் தொண்டு செய்ய ஏற்பாடு செய்கிறது மற்றும் ஊக்குவிக்கிறது. சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் பொதுவாக வலையிலும் சில நேரங்களில் ஊடகங்களிலும் தன்னார்வலர்களால் அறிவிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்பு[தொகு]