பூபதிராசு சோமராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூபதிராசு கோமராசு
Bhupathiraju Somaraju
பிறப்பு25 செப்டம்பர் 1948 (1948-09-25) (அகவை 75)
ஆகிவீடு, சென்னை மாகாணம், இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்பூ.சோமராசு
படித்த கல்வி நிறுவனங்கள்குண்டூர் மருத்துவ அறிவியல் நிறுவனம், சண்டிகர் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுகலை நிறுவனம், சவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம்
பணிஇதயவியல், பேராசிரியர்
அறியப்படுவதுகேர் மருத்துவமனை நிறுவனர்
விருதுகள்பத்மசிறீ
2014 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் போற்றப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்:[1]

பூபதிராசு சோமராசு (Bhupathiraju Somaraju) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இருதயநோய் நிபுணர் ஆவார். பூ.சோமராசு என்று சுருக்கமாவும் இவர் அழைக்கப்படுகிறார். 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று சோமராசு பிறந்தார். ஐதராபாத்திலுள்ள கேர் மருத்துவமனையின் தலைவராகவும் இவர் செயல்பட்டார்.[2][3] மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் பல மருத்துவக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மற்றும் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் சோமராசு இருந்தார்.[4][5] [6] 2001 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நாட்டில் வழங்கப்படும் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை பூபதிராசு சோமராசுக்கு வழங்கி சிறப்பித்தது.[7]

ஐதராபாத்தில் உள்ள நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இதயவியல் துறையின் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் மற்றும் அந்நிறுவனத்தின் கல்லூரி தலைவராகவும் பூபதிராசு சோமராசு பணிபுரிந்துள்ளார்.[8]

மருத்துவர் சோமராசு ஐதராபாத்து கேர் மருத்துவமனையின் இருதயநோய் நிபுணர்கள் குழுவுடன் சேர்ந்து 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஐதராபாத்து நகரின் புறநகர் பகுதியான காச்சிபௌலியில் உள்ள ஆசிய இரையகக்குடலியல் நிறுவனத்திற்கு இடம்பெயர்ந்தார்.[9]

1998 ஆம் ஆண்டில், சோமராசு அப்துல் கலாமுடன் இணைந்து "கலாம்-ராசு உறைகுழாய் என்று பெயரிடப்பட்ட குறைந்த விலையிலான இரத்தக்குழாய் சார்ந்த உறைகுழாய் ஒன்றை உருவாக்கினார்.[10][11] 2012 ஆம் ஆண்டில் இருவரும் சேர்ந்து கிராமப்புறங்களில் சுகாதாரப் பாதுகாப்புக்காக கலாம்-ராசு வரைபட்டிகை என்று பெயரிடப்பட்ட ஒரு கணினியை வடிவமைத்தனர்.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://pharmaleaders.tv/care-hospital-chief-noted-cardiologist-dr-somaraju-bhupathiraju-to-receive-the-prestigious-indias-most-admired-surgeon-2014-at-indian-affairs-5th-annual-india-leadership-2/
 2. "Dr. B. Somaraju, Care Hospital". Video. YouTube. 1 July 2008. பார்க்கப்பட்ட நாள் 10 January 2015.
 3. "Economic Times". Economic Times. 2012. பார்க்கப்பட்ட நாள் 10 January 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
 4. "Microsoft Academic Research". Microsoft Academic Research. 2014. Archived from the original on 10 January 2015. பார்க்கப்பட்ட நாள் 10 January 2015.
 5. "PubFacts". PubFacts. 2014. பார்க்கப்பட்ட நாள் 10 January 2015.
 6. "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016.
 7. "Padma Awards" (PDF). Padma Awards. 2014. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
 8. "Ex-Deans". NIMS-Nizam's Institute of Medical Sciences. பார்க்கப்பட்ட நாள் 28 June 2021.
 9. Kaniza Garari (8 November 2019). "Dr. Soma Raju shifts to AIG". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/nation/current-affairs/081119/dr-soma-raju-shifts-to-aig.html. 
 10. "Story of indigenous stents". The Hindu-Businessline (India). 15 August 2001 இம் மூலத்தில் இருந்து 28 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120528085930/http://www.hindu.com/businessline/2001/08/15/stories/041567so.htm. 
 11. "The stent man". Rediff-News (India). 19 December 1998. http://www.rediff.com/news/1998/dec/19ap.htm. 
 12. Gopal, M. Sai (22 March 2012). "Now, 'Kalam-Raju tablet' for healthcare workers". The Hindu (India). http://www.thehindu.com/news/cities/Hyderabad/article3025860.ece. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபதிராசு_சோமராசு&oldid=3371099" இலிருந்து மீள்விக்கப்பட்டது