பூட்டான்-இந்தியா எல்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூட்டானின் புன்ட்ஷிலிங்கில் இந்திய-பூட்டான் எல்லையாகவுள்ள வாயில்

பூட்டான்-இந்தியா எல்லை (Bhutan-India Border) என்பது பூட்டான் மற்றும் இந்தியக் குடியரசுக்கு இடையேயான சர்வதேச எல்லையாகும். கிழக்கில் அசாம் (267 கிமீ), வடகிழக்கில் அருணாச்சலப் பிரதேசம் (217 கிமீ), தெற்கில் மேற்கு வங்காளம் (183 கி.மீ), மேற்கில் சிக்கிம் (32 கி.மீ) ஆகிய இந்திய மாநிலங்களை இணைக்கும் இந்த எல்லை, 699 கிமீ நீளம் கொண்டிருக்கிறது.[1]

பூட்டான்-இந்தியா எல்லை வரையறுத்தல்[தொகு]

1865 ஆம் ஆண்டில் பூட்டான் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரிட்டனுக்கும் பூட்டானுக்கும் இடையே சமாதான உடன்படிக்கையின்படி, பூட்டானின் எல்லை வரையறுக்கப்பட்டது. 1973-1984 காலப்பகுதியில் பூட்டான் மற்றும் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் பூட்டான்-இந்தியா எல்லை விரிவானது இறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அருணாச்சல பிரதேச எல்லையிலும், சர்பாங் மற்றும் கெளிபுக்குமிடையிலான எல்லைப்பகுதிகளில் சின்னச்சிறு பிரச்சினைகள், மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய நிலையில் இன்றும் உள்ளன.[2]

ஜெய்கோன் (மேற்கு வங்காளம்)[தொகு]

பூட்டான் மற்றும் இந்தியா இடையேயான எல்லைகளில், இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் உள்ள ஜெய்கோன் மட்டுமே பூட்டானில் நுழைவதற்கு ஒரே நிலப்பகுதியாக உள்ளது. எனவே இந்தியாவில் ஜெய்கோன் மற்றும் பூட்டானில் உள்ள புன்சோலிங்  நகரங்களுக்கிடையில் உள்ள நிலப்பகுதி வெளிநாட்டு மக்களுக்கு ஒற்றை நுழைவுப் புள்ளியாக உள்ளது[3]

பூட்டான்-இந்தியா எல்லை பாதுகாப்பு[தொகு]

இந்தியாவின் எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசாங்கம் 12 படைகளை சஷாஸ்ட் சீமா பால் (SSB), 132 எல்லைப் பதிவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இருதரப்பு இந்திய-பூட்டான் கூட்டு எல்லை மேலாண்மை மற்றும் பாதுகாப்பு அமைப்பு இரு நாடுகளுக்கும் இடையே எல்லைகளை ஒத்துழைத்து மதிப்பிடுவதற்கும், பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]