பு. ஜோ. சர்மா
Appearance
பு. ஜோ. சர்மா | |
---|---|
பிறப்பு | புதிபெத்தி ஜோகேஸ்வர சர்மா விசயநகரம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | (அகவை 81) ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
பணி | நடிகர், எழுத்தாளர் |
பிள்ளைகள் | நடிகர்கள் பி. சாய் குமார் பு. ரவிசங்கர் உட்பட 5 பேர் |
உறவினர்கள் | ஆதி (பேரன்) |
புதிபெத்தி ஜோகேஸ்வர சர்மா (Pudipeddi Jogeswara Sarma) ஓர் இந்திய திரைப்பட ஒலி மொழிமாற்றக் கலைஞராக இருந்தார். பின்னர், நடிகராகவும் எழுத்தாளராகவும் மாறினார். தெலுங்குத் திரைப்படங்களிலும், ஒரு சில தமிழ், கன்னட படங்களில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர்.[2] இவர் ஒரு நடிகராகவும், ஒலி மொழிமாற்றக் கலைஞராகவும் 500க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.[3][4] நடிகர்கள் சாய்குமார், பு. ரவிசங்கர், அய்யப்பா பு.சர்மா ஆகியோரின் தந்தை ஆவார்.[5] இவர், நந்தி விருது, தென்னிந்திய பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
இவர் 14 திசம்பர் 2014 அன்று தனது 81 வயதில் மாரடைப்பால் காலமானார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "P J Sharma - MaaStars". MAA Stars. Movie Artists Association (MAA). பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
- ↑ 'Prema Kavali' release today - The Hindu
- ↑ P J Sharma
- ↑ 'Dialogue King' on a roll - The Hindu
- ↑ M. L., Narasimham. "Star voices". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
- ↑ "Telugu actor, dubbing artiste P J Sarma no more". The Hindu. 14 December 2014. http://www.thehindu.com/features/cinema/telugu-actor-dubbing-artiste-p-j-sarma-no-more/article6691020.ece.