புஷ்பா பூயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புஷ்பா பூயன்
பிறப்பு1946
இறப்பு7 அக்டோபர் 2015
புது தில்லி
இணையம்http://www.pushpabhuyan.com/pushpa_bhuyan.html

புசுப்பா பூயான் (Pushpa Bhuyan) ( பிறப்பு: 1946-இறப்பு: 2015 அக்டோபர் 7) இவர் பரதநாட்டியம் மற்றும் சத்ரிய நடனம் ஆகிய இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இந்திய நடனக் கலைஞர் ஆவார். [1] இவர் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமின் சோர்காட்டு பகுதியிலிருந்து வந்தவர்.

இவர் தனது சிறு வயதிலேயே பாரம்பரிய நடனத்தில் ஈடுபாடு கொண்டு பாரம்பரிய நடனத்திற்காக ஒரு பயணத்தை மேற்கொண்டார். புசுப்பா பூயன் ஒரு தொழில்முறை நிபுணராக பாரம்பரிய நடத்தின் மதிப்புமிக்க துறையில் இறங்கிய முதல் சில அசாமிகளில் ஒருவர். சென்னையின் கலாசேத்திராவில் பரதநாட்டியம் கற்ற முதல் அசாமியராக இருந்தார். புசுப்பாவின் ஆரம்பகால குருவாக இருந்த இவரது காலத்தின் புகழ்பெற்ற கலாச்சார கலைஞரான தனுராம் நியாம்கோரா போராவுக்குப் பிறந்த இவர், புகழ்பெற்ற பாரம்பரிய நிபுணராக இருக்க தனது தந்தையால் ஊக்கப்படுத்தப்பட்டார். [2] இவர் பாபானந்தா பார்பயன் என்பவரிடமிருந்து சத்ரிய நடன்த்தைக் கற்றுக்கொண்டார். பின்னர் இவர் குரு மாங்குடி துரைராச ஐயரின் கீழ் பரதநாட்டியம் பயின்றார். [3] [4] இவர் மற்ற நடனக் கலைஞர்களையும் பயிற்றுவித்துள்ளார். வடகிழக்கு தொலைக்காட்சி நிறுவனம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற்றுள்ளார். புசுப்பா பூயனை இந்திய அரசு 2002 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமை விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. [5]

ஆரம்ப காலம்[தொகு]

இவரது பயணம் 1956 ஆம் ஆண்டில் தொடங்கியது. தனது சிறுவயதிலேயே, ​​பரதநாட்டியத்தில் பயிற்சி பெறுவதற்காக அசாமின் ஜோர்ஹாடிலிருந்து, சென்னைக்கு தைரியமாக பயணம் செய்தார். ருக்மிணி தேவி அருண்டேல் நேரடி பயிற்சியின் கீழ் உலகப் புகழ்பெற்ற கலாசேத்திராவில் முறைப்படி பயிற்சிப் பெற்றார். வடகிழக்கிலிருந்து வந்த முதல் சீடராக இவர் இருந்ததால் ருக்மிணி தேவி அருண்டேல், இவர் மீது சிறப்பு அக்கறை எடுத்துக் கொண்டார். புகழ்பெற்ற கௌரி அம்மாவிடமிருந்து அபிநயத்தின் ஆழமான நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதேசமயம், ஜெய்ப்பூர் கரானாவின் சுந்தர்லால்ஜியின் சீடராக இருந்த குரு விஷ்ணு வைஷல்கர் மற்றும் லக்னோவைச் சேர்ந்த குரு ஷம்பு மகாராஜ் ஆகியோரிடமிருந்து கதக் நடன வடிவத்தை புஷ்பா கற்றுக்கொண்டார்.

சென்னையில்[தொகு]

புஷ்பா, சென்னையின் பெரும்பாலான சபாக்களில் நட்டுவனாரான தனது குரு குபர்நாத் பிள்ளையுடன் நிகழ்ச்சிகளை வழங்கினார். நாரத கானசபா, கிருஷ்ணா கானசபா, பிரம்ம கானசபா, இசை அகாதமி போன்ற அனைத்து சபாக்களிலும் தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். காட்மாண்டுவில் அப்போதைய நேபாள மன்னர் போன்ற அரச பிரமுகர்களுக்கு முன்பாகவும் இவர் தனது நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.

வெளிநாடுகளில்[தொகு]

அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம், சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், ஆத்திரேலியா மற்றும் இந்தியாவின் அனைத்து முக்கிய இடங்களிலும் புஷ்பா தனது மூன்று 3 மகள்களுடன் உலகம் முழுவதும் விரிவாக நடனங்களை நிகழ்த்தியுள்ளார். ஆத்திரேலியாவின் மெல்பேர்ன் மற்றும் பிரான்சின் லில்லி ஆகிய இடங்களில் ஒரு நடனப் பள்ளியையும் நடத்தி வந்தார். இந்திய சுதந்திரத்தின் ஐம்பதாவது ஆண்க் கொண்டாட்டத்தின் போது, ​​அமெரிக்காவிற்கு சென்ற ஒரு கலாச்சார தூதுக்குழுவின் ஒரு பகுதியாகவும் புஷ்பா இருந்தார். அங்கு லாஸ் ஏஞ்சல்ஸ், சால்ட் லேக் நகரத்தில் அசாமின் பாரம்பரிய நடனமான சத்ரிய நடன நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.

கௌரவங்கள்[தொகு]

தூர்தர்ஷனால் ஒரு சிறந்த தர கலைஞராக வகைப்படுத்தப்பட்டார். தூர்தர்ஷனில் மதிப்புமிக்க தேசிய இசை மற்றும் நடன நிகழ்ச்சியில் சில பாராட்டப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கினார். தூர்தர்ஷனின் மத்திய தணிக்கைக் குழுவில் உறுப்பினராக் இருந்தார். அசாம் குவகாத்தியில் "புஷ்பஞ்சலி கலாச்சார அகாதமி" என்ற நடன நிறுவனத்தை நிறுவினார்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Highbeam". Highbeam. 10 July 2006. Archived from the original on 9 April 2016. பார்க்கப்பட்ட நாள் 1 February 2015.
  2. http://www.pushpabhuyan.com/pushpa_bhuyan.html
  3. "Guru Mangudi Dorairaja Iyer". Kala Sadhanalaya. 2015. Archived from the original on 4 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 1 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Nrityabhinay". Nrityabhinay. 2015. பார்க்கப்பட்ட நாள் 1 February 2015.
  5. "Padma Awards" (PDF). Padma Awards. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பா_பூயன்&oldid=3589029" இலிருந்து மீள்விக்கப்பட்டது