புல்வெட்டா
தோற்றம்
| புல்வெட்டா | |
|---|---|
| வெண்புருவ புல்வெட்டா | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | பாரடாக்சார்னிதிடே
|
| பேரினம்: | புல்வெட்டா டேவிட் & ஒவுசுடாலெட், 1877
|
| சிற்றினம் | |
|
8, உரையினை காண்க | |
புல்வெட்டா (Fulvetta) என்பது பாசரைன் பறவைகளின் பேரினமாகும். இப்பேரினம் முதலில் 1877-ல் முன்மொழியப்பட்டது. இது சமீபத்தில் வழக்கமான புல்வெட்டாக்களுக்காக மீண்டும் நிறுவப்பட்டது. இது திமாலிடே (பழைய உலக சிலம்பன்) அல்சிப்பே பேரினத்தைச் சேர்ந்த குருவிகளின் உறவினர்களுடன் நீண்ட காலமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.[1] ஆனால் இவை உண்மையில் கிளி அலகு பறவைகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவை. எனவே இவை இப்போது பாரடாக்சோர்னிதிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சிற்றினங்கள்
[தொகு]புல்வெட்டா பேரினமானது பின்வரும் எட்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[2]
| படம் | உள்ளூர் பெயர் | அறிவியல் பெயர் | பரவல் |
|---|---|---|---|
| கண்கண்ணாடி புல்வெட்டா | புல்வெட்டா ரூஃபிகாபிலா | சீனா | |
| இந்தோசீன புல்வெட்டா | புல்வெட்டா டானிசி | லாவோஸ், வியட்நாம் | |
| சீன புல்வெட்டா | புல்வெட்டா ஸ்ட்ரைடிகோலிசு | சீனா | |
| வெண்புருவ புல்வெட்டா | புல்வெட்டா வினிபெக்டஸ் | தென்கிழக்கு ஆசியாவில் பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், வியட்நாம் | |
| சாம்பல் கொண்டை புல்வெட்டா | புல்வெட்டா சினிரிசெப்சு | மணிப்பூர் | |
| தைவான் புல்வெட்டா | புல்வெட்டா பார்மோசனா | தைவான் | |
| மணிப்பூர் புல்வெட்டா | புல்வெட்டா மணிபுரென்சிசு | வடகிழக்கு இந்தியா, மியான்மர், யுன்னான் | |
| பழுப்புத் தொண்டை புல்வெட்டா | புல்வெட்டா லுட்லோவி | பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Collar & Robson (2007)
- ↑ "Sylviid babblers, parrotbills, white-eyes". IOC World Bird List Version 12.2. International Ornithologists' Union. August 2022. Retrieved 19 September 2022.