புரூசு வின்சுட்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரூசு விசுட்டைன்
Bruce Winstein
பிறப்புசெப்டம்பர் 25, 1943
இலாசு ஏஞ்சலீசு
இறப்புபெப்ரவரி 28, 2011(2011-02-28) (அகவை 67)
தேசியம்அமெரிக்கர்
துறைசெய்முறை இயற்பியலும் அண்டவியலும்
பணியிடங்கள்பிரின்சுட்டன், சிக்காகோ பல்கலைக்கழகம், பெர்மி ஆய்வகம்
கல்விகலிபோர்னியா பல்கலைக்கழகம், இலாசு ஏஞ்சல்சு
கல்வி கற்ற இடங்கள்கால்டெக்
விருதுகள்W.K.H. பனோவ்சுகி பரிசு, செய்முறை துகள் இயற்பியல்


புரூசு வின்சுட்டைன் (Bruce Winstein) (செப்டம்பர் 25,1943 - பிப்ரவரி 28,2011) ஒரு சோதனை இயற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார் , அவர் அடிப்படை துகள் இயற்பியலில் தனது தொடக்கப் பணிக்காக குறிப்பிடப்படுகிறார் , குறிப்பாக, துகள்கள், அவற்றின் எதிர் துகள்களுக்கு இடையிலான சமச்சீரற்ற தன்மையை நிறுவுவதற்கான வேலைக்காகக் குறிப்பிடப்படுகிறார். அவரது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில் , நுண்ணலை பின்னணி கதிர்வீச்சின் முனைமையை அளவிடும் செய்முறை அண்டவியலில் பணியாற்றினார் , அதன் பண்புகள் தொடக்க கால அண்டத்திற்கு முந்தையவை.[1]

தொழில் வாழ்க்கை[தொகு]

செய்முறை அடிப்படை துகள் இயற்பியலில் ஒரு புகழ்பெற்ற தொடக்க வாழ்க்கைக்குப் பிறகு , வின்சுட்டைன் பிரின்சுட்டனில் ஓராண்டுக்குக் குகென்கெய்ம் ஆய்வுறுப்பினராக, பொதுவாக வானியற்பியலும் குறிப்பாக, நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சும் பற்றிப் படித்தார்.[2] பின்னர் அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் சாமுவேல் கே. அலிசன் கட்டில் பேராசிரியராகத் தனது பதவிக்கு திரும்பினார் , அங்கு அவர் அதன் NSF இயற்பியல் எல்லைப்புற மையத்தை அண்டவியல் இயற்பியலுக்காக நிறுவினார்.[3]

1999 ஆம் ஆண்டில் , அவர் பெர்மி ஆய்வக KTeV செய்முறையின் தலைவராக இருந்தார் , இது நேரடி CP மீறலுக்கான முதல் உறுதியான அடிப்படையை உருவாக்கியது. இது பொருள், பொருள் எதிர்ப்பில் சரியான இரட்டையர்கள் அல்ல என்பதற்கான முதன்மையான சான்றாகும்.[4] நுண்ணலைப் பின்னணி கதிர்வீச்சின் முனைமையை அளவிடுவதன் வழி தொடக்க அண்டத்தில் ஈர்ப்பு அலைகளைக் கண்டறிய முயன்ற பல ஆண்டு பன்னாட்டு ஒத்துழைப்பான QUIET செய்முறையின் தலைவராகவும் இருந்தார்.[4][5]

இவர் இலாசு ஏஞ்சலீசு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலிலும் கணிதத்திலும் அறிவியல் இளவல் பட்டமும் , 1970 இல் கால்டெக்கில் இருந்து முனைவர் பட்டமும் பெற்றார்.

வின்சுட்டைன் 1999 முதல் குகென்கெய்ம் ஆய்வுறுப்பினராக இருந்தார் , 2003 ஆம் ஆண்டில் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வுறுப்பினராக ஆனார்.[6]

வின்சுட்டைன் 1995 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் அறிவியல் கல்விக்கழகத்திலும் , 2007 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழகத்திலும் சேர்க்கப்பட்டார்.[7][8] 2007 ஆம் ஆண்டில் இவருக்கு அமெரிக்க இயற்பியல் கழகத்தால் செய்முறை துகள் இயற்பியலில் டபிள்யூ. கே. எச். பனோவ்சுகி பரிசு வழங்கப்பட்டது.

தகைமைகள்[தொகு]

வின்சுட்டைன் தேசிய அறிவியல் கல்விக்கழகம், அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழகம் ஆகிய இரண்டிலும் உறுப்பினராக இருந்தார்.[3] 2007 ஆம் ஆண்டில் அமெரிக்க இயற்பியல் கழகம் அவருக்கு செய்முறை துகள் இயற்பியலில் W. K. H. பனோவ்சுகி பரிசை பின்வரும் மேற்கோள்களுடன் வழங்கியது; "நடுநிலைக் கே மெசோன்களின் பண்புகளின் துல்லியமான அளவீடுகளின் தொடர்ச்சியான செய்முறைகளில் தலைமை வகித்ததற்காகவும் குறிப்பாக நேரடி CP மீறல் கண்டுபிடிப்புக்காகவும்" .

மேற்கோள்கள்[தொகு]

  1. Frisch, Henry; Rosner, Jonathan; Staggs, Suzanne (2012). "Obituary of Bruce Winstein (1943-2011)". Physics Today. doi:10.1063/PT.4.1768. 
  2. Carroll, Sean. "Bruce Winstein". Discover blog "Cosmic Variance". பார்க்கப்பட்ட நாள் January 10, 2020.
  3. 3.0 3.1 "W.K.H. Panofsky Prize in Experimental Particle Physics". American Physical Society. பார்க்கப்பட்ட நாள் January 10, 2020.
  4. 4.0 4.1 "Bruce Winstein, physicist, 1943-2011". University of Chicago News. https://news.uchicago.edu/story/bruce-winstein-physicist-1943-2011. பார்த்த நாள்: January 10, 2020. 
  5. "Q/U Imaging Experiment, Quiet". University of Chicago. பார்க்கப்பட்ட நாள் January 10, 2020.
  6. "Bruce Winstein". John Simon Guggenheim Memorial Foundation. பார்க்கப்பட்ட நாள் January 10, 2020.
  7. "Bruce Winstein" (PDF). National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் January 10, 2020.
  8. "Members of the American Academy Listed by election year, 2000-2019" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 10 January 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூசு_வின்சுட்டைன்&oldid=3775578" இலிருந்து மீள்விக்கப்பட்டது