உள்ளடக்கத்துக்குச் செல்

புருனோ பெர்னாண்டசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புருனோ பெர்னாண்டசு

புருனோ மிகுவல் போர்சசு பெர்னாண்டசு (2018)
சுய தகவல்கள்
முழுப் பெயர்புருனோ மிகுவல் போர்சசு பெர்னாண்டசு[1]
பிறந்த நாள்8 செப்டம்பர் 1994 (1994-09-08) (அகவை 30)[2]
பிறந்த இடம்மையா, போர்த்துகல்
உயரம்1.79 m (5 அடி 10 அங்)[2]
ஆடும் நிலை(கள்)நடுக்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
மான்செஸ்டர் யுனைடெட்
எண்8
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2012–2013நோவாரா23(4)
2013–2016உடினீசு86(10)
2016–2017சம்ப்டோரியா33(5)
2017–2020சுபோர்ட்டிங் சிபி83(39)
2020–மான்செஸ்டர் யுனைடெட் 151(48)
பன்னாட்டு வாழ்வழி
2017–போர்த்துகல்64
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 20:59, 17 March 2024 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 21:49, 21 March 2024 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

புருனோ மிகுவல் போர்சசு பெர்னாண்டசு (பிறப்பு: 8 செப்டம்பர் 1994) ஒரு போர்த்துகீசிய கால்பந்து வீரர் ஆவார். இவர் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் விளையாடுகிறார்.[3] ஒரு நடுக்கள வீரரான இவர் தனது கடந்து செல்லும் திறன் மற்றும் படைப்பாற்றல் நுட்பத்திற்காக அறியப்படுகிறார்.[4]

கழக வாழ்வழி

[தொகு]

போர்டோவின் மையாவில் பிறந்த பெர்னாண்டசு, இத்தாலிய சீரீ பி சரியான நோவாராவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், விரைவில் 2013 ஆம் ஆண்டில் சீரீ ஆ அணியான உடினீசுக்கு விளையாடச் சென்றார், அதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சம்ப்டோரியா அணிக்காக விளையாடினார்.[5][6][7] இத்தாலியில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் 2017 இல் போர்த்துக்கீசிய அணியான சுபோர்ட்டிங் சிபி உடன் கையெழுத்திட்டார்.[8] இவர் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் போர்த்துக்கீசிய லிகா பட்டத்தை வென்றார்.  2018-19 ஆம் ஆண்டில் இவர் அனைத்து போட்டிகளிலும் 33 கோல்களை அடித்து சாதனையை நிகழ்த்தினார்.[9][10] இதனால் இவர் ஐரோப்பாவில் ஒரே சீசனில் அதிக கோல் அடித்த நடுக்கல வீரராக ஆனார்.

சனவரி 2020 இல், பெர்னாண்டசு இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு விளையாடுவதற்காக கையெழுத்திட்டார்.[11] 3 சனவரி 2023 அன்று, பெர்னாண்டசு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக தனது 150வது ஆட்டத்தில் விளையாட்டினார்.[12] 2023 சூலை மாதத்தில், பெர்னாண்டசு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[13]

பன்னாட்டு வாழ்வழி

[தொகு]

2017 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் போர்த்துகீசிய அணிக்காக அறிமுகமான இவர், 2018 உலகக்கோப்பை, 2019 யுஇஎப்ஏ நேசன்சு லீக் இறுதிப் போட்டிகள், யுஇஎப்ஏ யூரோ 2020 மற்றும் 2022 உலகக்கோப்பைகளில் விளையாடிய போர்த்துகீசிய அணிகளில் தேர்வு செய்யப்பட்டார்.[14][15][16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "FIFA World Cup Russia 2018 List of Players" (PDF). FIFA. Archived from the original (PDF) on 12 August 2018.
  2. 2.0 2.1 "Bruno Fernandes: Overview". Premier League. Retrieved 30 December 2023.
  3. Burns, Euan (30 September 2021). "'We ought to try more': how to pronounce footballers' names". The Guardian. Retrieved 11 May 2023.
  4. "FC 100 best men's soccer attacking midfielders, 2022-23". ESPN. 4 July 2023. Retrieved 18 October 2023.
  5. Davies, Matt (1 October 2020). "Bruno Fernandes reveals tears of joy in emotional tale of Man Utd move". Evening Standard. Retrieved 26 July 2023.
  6. Roseiro, Bruno (27 June 2017). "Bruno Fernandes. The kid who started rolling in the hockey capital". Observador. Lisbon. Archived from the original on 28 November 2020. Retrieved 25 May 2018.
  7. "Bruno Fernandes, Udinese's umpteenth steal". Yahoo! Sports. 3 December 2013. Archived from the original on 8 April 2016. Retrieved 27 March 2016.
  8. "Sporting: Bruno Fernandes with 100 million clause". Maisfutebol. IOL. 27 June 2017. Retrieved 27 June 2017.
  9. Ribeiro, Patrick (25 May 2019). "Sporting complete cup-double over Porto and secure Taça de Portugal title". PortuGOAL. Retrieved 13 January 2020.
  10. "Bruno Fernandes". ForaDeJogo.net. Retrieved 28 January 2020.
  11. "Bruno Fernandes: Manchester United agree deal with Sporting Lisbon". BBC Sport. 29 January 2020. Retrieved 2 February 2020.
  12. "Win a signed Bruno Fernandes shirt". ManUtd. Manchester United. 4 January 2023. Retrieved 14 January 2023.
  13. "Fernandes named United's new club captain". ManUtd. Manchester United. 20 July 2023. Retrieved 20 July 2023.
  14. "Poland vs Portugal, UEFA Nations League". UEFA. Retrieved 26 February 2019.
  15. Thanveer, Dakir Mohammed (25 October 2022). "Portugal reportedly name provisional 55-man squad for 2022 FIFA World Cup; Liverpool star receives surprise call up". Sportskeeda. Retrieved 9 November 2022.
  16. "Convocados de Portugal para o EURO 2020". UEFA. 20 May 2021. Retrieved 11 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புருனோ_பெர்னாண்டசு&oldid=3919508" இலிருந்து மீள்விக்கப்பட்டது