புரி கடற்கரை
| |||||||
Location | புரி, ஒடிசா, இந்தியா | ||||||
---|---|---|---|---|---|---|---|
Coast | வங்காள விரிகுடா | ||||||
Type | இயற்கையான, மணல் கரை | ||||||
Governing authority | OTDC |
புரி கடற்கரை (Puri Beach) அல்லது தங்கக் கடற்கரை என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பூரி நகரில் உள்ள கடற்கரையாகும். இது வங்காள விரிகுடாவின் கரையில் உள்ளது. இது சுற்றுலாத் தலமாகவும் இந்துக்களின் புனித இடமாகவும் அறியப்படுகிறது.[1][2] இந்தியச் சுற்றுலா அமைச்சகம், ஒடிசா நகரம், கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு ஆணையம் மற்றும் கொல்கத்தாவின் கிழக்கு மண்டல கலாச்சார மையம் இணைந்து வருடம் தோறும் புரி கடற்கரை விழாவினை கொண்டாடுகிறது.[3] சர்வதேச விருது பெற்ற உள்ளூர் மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் மணல் சிற்ப காட்சிகளை இந்த கடற்கரையில் காணலாம்.[4][5][6][7] புரியில் உள்ள தங்கக் கடற்கரைக்கு டென்மார்க்கின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை (FEE) 2020 அக்டோபர் 11 அன்று மதிப்புமிக்க 'நீலக் கொடி' குறிச்சொல்லை வழங்கியது.
போக்குவரத்து[தொகு]
புரி கடற்கரையானது புரி ரயில் நிலையம் மற்றும் கடற்கரையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள விமான நிலையம் புவனேசுவரில் உள்ள பிஜு பட்நாயக் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது 60 ஆகும் கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உள்ளூர் போக்குவரத்திற்குப் பேருந்துகள் மற்றும் வாடகை சொகுசு வாகனங்கள் கிடைக்கின்றன.
புரி கடற்கரை காட்சிகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ [1]
- ↑ "Indian journal of marine sciences", Volume 15, 1986. publisher: Council of Scientific & Industrial Research (India), Indian National Science Academy
- ↑ [2]
- ↑ "Archived copy". மூல முகவரியிலிருந்து 2010-08-28 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-05-26.
- ↑ [3]
- ↑ "Archived copy". மூல முகவரியிலிருந்து 2011-01-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-05-26.
- ↑ [4]
வெளி இணைப்புகள்[தொகு]
- ஒரிசா அரசாங்க இணையதளத்தில் பூரி கடற்கரை
- நகர இணையதளத்தில் பூரியின் நிலப்பரப்பு
- பூரியில் உள்ள மீனவர்கள் கிராமத்தில் கடற்கரை
- ஒரிசாவில் பூரி கடற்கரை