சுதர்சன் பட்நாயக்
சுதர்சன் பட்நாயக் | |
---|---|
பிறப்பு | 15 ஏப்ரல் 1977 பூரி, ஒடிசா, இந்தியா |
பணி | சர்வதேச மணற் கலைஞர் |
விருதுகள் | பத்மசிறீ (2014) |
வலைத்தளம் | |
www |
சுதர்சன் பட்நாயக் (ஆங்கிலம்:Sudarsan Pattnaik, பி. ஏப்ரல் 15, 1977) புபனேஷ்வரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பூரி எனும் ஊரில் 1977 ஆம் வருடம் ஏப்ரல் 15 இல் பிறந்தார். இவர் ஒரு மணற் சிற்பக் கலைஞர். இந்தியாவில் மணற் சிற்பக் கலை பிறப்பதற்கு காரணமாக இருந்தவர். இவருடைய ஏழாவது வயதிலிருந்து மணலில் சிற்பம் செதுக்குவதைத் தொடங்கினார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்களை செய்து உள்ளார். நிறைய பதக்கங்களை உலக அளவில் வென்றுள்ளார். மேலும் உலக சாதனையாளர் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.அவருக்கு 2014 ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Four person from Odisha to get Padma Shri award including Sand artist Sudarshan Patnaik". Odishadiary.com. 25 January 2014. Archived from the original on 3 பிப்ரவரி 2014. https://web.archive.org/web/20140203222442/http://www.orissadiary.com/CurrentNews.asp?id=47524. பார்த்த நாள்: 26 January 2014.