மணற்சிற்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆவுத்திரேலியாவில் இடம்பெற்ற மணற்சிற்பம் காட்சி சிறப்பாக மணற்கலையினை எடுத்துக்காட்டுகின்றது.

மணற்சிற்பம் என்பது மண்னைக் கொண்டு கலைத்துவ வடிவமாக உருவாக்கப்படும் வடிவங்களைக் குறிக்கும். மணற்கலை என்பது மணற்சிற்பங்களாகவோ, மணல் ஓவியங்களாகவோ காணப்படலாம். சிறிய அளவில் செய்யப்படும் மண் கோட்டைச் சிற்பங்களும் இதனுள் அடங்கும்.

மண்ணும் நீரும் மணற்சிற்பம் உருவாக்க அடிப்படையாகத் தேவைப்படும். இது பொதுவாக கடற்கரைகளில் இலகுவாகக் கிடைக்கும். அலை கூடிய கடற்கரைகளில் காணப்படும் மணல், அதன் இழையமைப்புத் தன்மையினால் மணற்சிற்பத்தின் உயரத்தையும் கட்டமைப்பையும் மட்டுப்படுத்திவிடும். சிற்பம் செய்ய ஏற்ற நல்ல மண் அழுக்கானதும் சேற்றுப்படிவும் களியும் உள்ள மண் இழையமைப்பையும் ஒழுங்கற்ற வடிவத்தையும் இறுக்கிப் பிடிக்க உதவுகிறது. மணற் கோட்டைகள் பொதுவாக சிறுவர், சிறுமியரால் விளையாட்டுக்காக உருவாக்கப்படும். ஆனாலும் வளந்தவர்களுக்கான போட்டிகள் பெரிய, கடினமான கட்டுமானங்கள் உருவாக வழியேற்படுத்துகின்றன. சில ஏணிகளுடனான 18 அடி உயரமான பாரிய மணற் கோட்டை ரொனால்டு மல்குனிச்சோ என்பவரால் போட்டி ஒன்றின்போது உருவாக்கப்பட்டது. அது செய்து முடிக்கப்பட 1 டன் மணலும் 10 லீட்டர் நீரும் தேவைப்பட்டன. போட்டி ஒன்றில் வெற்றிபெற்ற திறமைமிக்க உக்ரேனிய நாட்டவரான சேனியா சிமோனோவா என்பவரால் உருவாக்கப்பட்ட மணல் ஓவியம் அவருக்கு புகழையும் தேடித்தந்த இணைய இணைப்பு இயற்காட்சியாகவும் இருந்தது. இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் தாக்கம் தன் குடும்பத்தை எவ்வாறு பிரித்தது என்பதை அவ் மணல் ஓவியம் சித்தரித்தது.[1].

குறிப்புக்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-03-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணற்சிற்பம்&oldid=3223519" இருந்து மீள்விக்கப்பட்டது