புத்தாயிரம் விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புத்தாயிரம் விளையாட்டரங்கம் (Millennium Stadium) என்பது வேல்ஸ் நாட்டின் தேசிய விளையாட்டரங்கம் ஆகும். இது கார்டிஃப் நகரில் அமைந்துள்ளது. விளம்பர ஆதரவு காரணங்களுக்காக பிரின்சிபாலிட்டி விளையாட்டரங்கம் (Principality Stadium) என்று அழைக்கப்படுகிறது. 1999-ஆண்டு ரக்பி உலகக் கோப்பையை நடத்தும் பொருட்டு இவ்விளையாட்டரங்கம் கட்டப்பட்டது.[1] பெரும்பாலும் ரக்பி போட்டிகளுக்காக பயன்படுத்தப்படும் இவ்வரங்கம் கால்பந்து, இசைநிகழ்ச்சிகள் போன்ற பெருந்திரள் மக்கள் வரத்துடைய முக்கிய நிகழ்வுகளையும் நடத்தப் பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தின் வெம்ப்ளி அரங்க புனரமைப்புக் காலகட்டத்தில் எஃப் ஏ கோப்பை இறுதிப் போட்டிகள் இவ்விளையாட்டரங்கிலேயே நடத்தப்பெற்றன. இவ்வரங்கம் மூடக்கூடிய கூரையைக் கொண்டதாகும்.

2016-17ஆம் ஆண்டுக்கான யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதிப் போட்டி இவ்விளையாட்டரங்கில் நடத்தப்பட உள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. "Millennium Stadium Information". Millennium Stadium. Archived from the original on 3 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 28 August 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)