புக்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புக்கான் (ஆங்கிலம்: Bukan; பாரசீக : بوکان) என்றும்  ஈரானின் மேற்கு அசர்பைசான் மாகாணத்தில் அமைந்துள்ள நகரமாகும். 2017 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி ஏறத்தாழ 57,000 குடும்பங்களில் 205,000 மக்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இது மாகாணத்தின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக திகழ்கிறது. மாகாணத்தின் தலைநகரிலிருந்து 184 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. மக்கட் தொகையில் எழுபத்தைந்து சதவீதம் பேர் நகர்ப்புறத்தில் குடியேறியவர்கள் ஆவார்கள். 25% வீதமானோர் கிராமப்புறங்களில் (ஈரான் 2012 மக்கள் தொகை கணக்கெடுப்பு) வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் குர்திஷ் பேசும் சமூகமாகும்.[2]

வரலாறு[தொகு]

இஸ்லாத்திற்கு முந்தைய காலம்[தொகு]

புக்கானில் கிமு 4100 முதல் கிமு 4400 காலப்பகுதியின் கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கலைப்பொருட்கள் ஈரானிய பீடபூமியின் முதல் மனித குடியேற்றங்களில் ஒன்றாக புக்கான் இருந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன. புக்கான் மன்னேய நாகரிகத்தின் மையமாகவும் இருந்துள்ளது.[3]

இஸ்லாமிய காலத்திற்கு முந்தைய காலங்களில், பார்த்தன் பேரரசு மற்றும் சாசானிய சாம்ராஜ்யம் ஆகிய இரண்டிற்கும் புக்கான் கோட்டை காவற் படை தளமாக இருந்தது. புக்கான் மத்திய அசிரியப் பேரரசு, மேதியர்கள் மற்றும் உரார்ட்டு போன்ற பல்வேறு பேரரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது. தொல்பொருளியல் ரீதியாக இங்கு மீட்கப்பட்ட மிகப் பழமையான எச்சங்களான கராகஸ் நாச்சிட் மற்றும் கராகெண்ட் மேடுகள் வெண்கல காலத்தை சேர்ந்தவை.[4]

இஸ்லாமிய சகாப்தம்[தொகு]

643 ஆம் ஆண்டுகளில் புக்கான் முஸ்லிம்களின் கைவசமாகியது.[5] 15 ஆம் நூற்றாண்டில் அமீர்சிஃபோல்டின் மாகரி என்பவரில் கட்டுப்பாட்டில் வந்தது. சஃபாவிட் வம்சத்தைச் சேர்ந்த ஷா இஸ்மாயில் I அந்த பகுதியை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து தோல்வியுற்றார்.[6]

நவீன காலம்[தொகு]

1979 ஆம் ஆண்டு ஈரானிய புரட்சிக்குப் பின்னர் குர்திஷ் குழுக்களின் கட்டுப்பாட்டில் வந்தது. புக்கானை 1 ஜனவரி 1984 ஆம் ஆண்டில் ஈரானிய இராணுவம் மீண்டும் கைப்பற்றியது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கூற்றுப்படி ஈரானில் விடுவிக்கப்பட்ட கடைசி குர்திய நகரம் புக்கான் ஆகும்.[7] 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று புக்கான் மீது ஈராக்கிய படையால் குண்டு வீசப்பட்டது. அதனால் 19 பேர் இறந்தனர். மேலும் 160 பேர் காயமடைந்தனர்.[8]

அமைவிடம்[தொகு]

புக்கான் நகரம் உக்காமியா ஏரிக்கு தெற்கே கடல் மட்டத்திலிருந்து 1,300 முதல் 1,370 மீற்றரில் அமைந்துள்ளது. இது ஈரானின் மேற்கு அசர்பைசான் மாகாணத்தில் சிமினே ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.[9]

புள்ளிவிபரங்கள்[தொகு]

புக்கானில் வசிப்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் இவர்கள் குர்தி மொழியின் சோரானி பேச்சுவழக்கில் உரையாடுகின்றனர். 2012 ஆம் ஆண்டின் , நகர மக்கட் தொகையில் 93% வீதமானோர் முஸ்லிம்கள் ஆவார்கள்.[10]  புக்கானில் ஷியா பிரிவினர் சிறுபான்மையினராக காணப்படுகிறார்கள். கடந்த காலங்களில் நகரத்தில் ஏராளமான யூத குடும்பங்கள் வசித்து வந்தன.

வரலாற்றுத் தளம்[தொகு]

சர்தார் கோட்டை[தொகு]

ஹிஜ்ரி 1247 இல் சர்தாஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த சர்தார் அஜீஸ் கான் மோக்ரி என்பவர் புக்கானின் பெரிய நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஒரு கோட்டையைக் கட்டினார். அந்தக் கோட்டை அதன் நிறுவனர் சர்தார் அஜீஸ் கான் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை மலையின் மேல் கட்டப்பட்டது.

ஹிஜ்ரி 1325-1351 இல் காலத்தில் கோட்டை முறையே பொலிஸ் தலைமையகம், தபால் அலுவலகம் மற்றும் ஒரு பள்ளியாக மாற்றப்பட்டது. இறுதியாக ஹிஜ்ரி 1361 இல் முற்றிலுமாக அழிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது.

விளையாட்டு[தொகு]

புக்கான் நகரத்தில் மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்து ஆகும். 2000 ஆம் ஆண்டு முதல் புக்கானில் சர்தார் புக்கான் எப்சி என்ற தொழில்முறை கால்பந்து கழகம் இயங்கி வருகின்றது.[11]

சான்றுகள்[தொகு]

 1. "Amar Iran population in 2017". www.amar.org.ir. 2019-11-15 அன்று பார்க்கப்பட்டது.
 2. Rahim Farrokhnia (Iranian Kurds: A Case Study of Bukan) 2006-2012,University Hamadan, Iran
 3. محمودپدرام، ۳۰–۳۵
 4. hassanzade,Yuosef,izertu historical Monuments (Bukan) 2007,ISBN 9789640401408
 5. "Noorlib.ir". Archived from the original on 2015-09-15.CS1 maint: unfit url (link)
 6. مردوخ، تاریخ مشاهیرکُرد جلد دوم، ٣٧١-٣٧٢.
 7. "Farnews". Archived from the original on 2015-09-16.CS1 maint: unfit url (link)
 8. "Ziryan.ir news". web.archive.org. 2016-04-10. Archived from the original on 2016-04-10. 2019-11-15 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
 9. "Bukan". Archived from the original on 2014-02-22.CS1 maint: unfit url (link)
 10. "ورود به سایت". web.archive.org. 2018-08-02. Archived from the original on 2018-08-02. 2019-11-15 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
 11. "Sardar Bukan F.C". web.archive.org. 2015-09-15. Archived from the original on 2015-09-15. 2019-11-15 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கான்&oldid=3587634" இருந்து மீள்விக்கப்பட்டது