பீனைல்சிலேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீனைல்சிலேன்
Phenylsilane
skeletal formula of phenylsilane
skeletal formula of phenylsilane
ball-and-stick model of the phenylsilane molecule
ball-and-stick model of the phenylsilane molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பீனைல்சிலேன்
வேறு பெயர்கள்
சிலைல்பென்சீன்
இனங்காட்டிகள்
694-53-1 Y
ChEBI CHEBI:172874
ChemSpider 12228 Y
EC number 211-772-5
InChI
  • InChI=1S/C6H8Si/c7-6-4-2-1-3-5-6/h1-5H,7H3 N
    Key: PARWUHTVGZSQPD-UHFFFAOYSA-N N
  • InChI=1/C6H8Si/c7-6-4-2-1-3-5-6/h1-5H,7H3
    Key: PARWUHTVGZSQPD-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12752
SMILES
  • c1ccccc1[SiH3]
UNII P2EX7Q1UYS Y
பண்புகள்
C6H8Si
வாய்ப்பாட்டு எடை 108.22 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.878 கி/செ.மீ3
கொதிநிலை 119 முதல் 121 °C (246 முதல் 250 °F; 392 முதல் 394 K)
நீராற்பகுப்பு
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H261, H302, H315, H319, H332, H335
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பீனைல்சிலேன் (Phenylsilane) என்பது C6H5SiH3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சிலைல்பென்சீன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இது ஓர் எளிய கரிமசிலேன் சேர்மத்திற்கு எடுத்துக்காட்டாகும். கட்டமைப்பு ரீதியாக பீனைல்சிலேன் தொலுயீனுடன் தொடர்புடையது. தொலுயீனின் மெத்தில் குழு சிலைல் குழுவால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒற்றுமைகள் காரணமாக இந்த இரண்டு சேர்மங்களும் ஒரே மாதிரியான அடர்த்தி மற்றும் கொதிநிலைகளைக் கொண்டுள்ளன. பீனைல் சிலேன் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது.

தயாரிப்பு[தொகு]

டெட்ராயெத்தில் ஆர்த்தோ சிலிக்கேட்டிலிருந்து இரண்டு படிநிலைகளில் பீனைல்சிலேனைத் தயாரிக்கலாம். முதல் படிநிலையில் டெட்ராயெத்தில் ஆர்த்தோ சிலிக்கேட்டுடன் பீனைல் மக்னீசியம் புரோமைடு சேர்க்கப்படுகிறது. கிரிக்கனார்டு வினை நடைபெற்று Ph−Si(OEt)3 உருவாகிறது. இவ்விளைபொருளுடன் இலித்தியம் அலுமினியம் ஐதரைடு சேர்மத்தைச் சேர்த்தால் ஒடுக்க வினை நிகழ்ந்து பீனைல்சிலேன் உருவாகிறது.[2]

Ph−MgBr + Si(OEt)4 → Ph−Si(OEt)3 + MgBr(OEt)
4 Ph−Si(OEt)3 + 3 LiAlH4 → 4 Ph−SiH3 + 3 LiAl(OEt)4

பயன்கள்[தொகு]

மூவினைய பாசுபீன் ஆக்சைடுகளை தொடர்புடைய மூவினைய பாசுபீனாகக் குறைக்க பீனைல்சிலேன் பயன்படுத்தப்படுகிறது.

P(CH3)3O + PhSiH3 → P(CH3)3 + PhSiH2OH

பீனைல்சிலேன் பயன்பாடு பாசுபீனின் உள்ளமைவைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் தொடர்கிறது. உதாரணமாக, வளைய நாற்தொகுதி மையகைரல் மூவிணைய பாசுபீன் ஆக்சைடுகளை வளைய மூவிணைய பாசுபீன்களாகக் குறைக்கலாம்.[3]

சீசியம் புளோரைடுடன் பீனைல்சிலேன் வினைபுரிந்து ஏட்டு அணைவுச் சேர்மத்தைக் ([PhSiFH3]) கொடுக்கிறது. இது ஓர் ஐதரைடு வழங்கியாகச் செயற்பட்டு 4-ஆக்சசோலியம் உப்புகளை 4-ஆக்சசோலியன்களாக மாற்றுகிறது.[4]

செயற்கை நொதிகளில் பீனைல்சிலேன் ஐதரைடு வழங்கியாகச் செயற்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Phenylsilane".
  2. Minge, O.; Mitzel, N. W.; and Schmidbaur, H. Synthetic Pathways to Hydrogen-Rich Polysilylated Arenes from Trialkoxysilanes and Other Precursors. Organometallics 2002, 21, 680-684. எஆசு:10.1021/om0108595
  3. Weber, W. P. Silicon Reagents for Organic Synthesis. Springer-Verlag: Berlin, 1983. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-11675-3.
  4. Fleck, T. J. (2001). "Phenylsilane–Cesium Fluoride". Encyclopedia of Reagents for Organic Synthesis. doi:10.1002/047084289X.rp101. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471936235. 
  5. Hoffnagle, Alexander M.; Tezcan, F. Akif (2023-06-23). "Atomically Accurate Design of Metalloproteins with Predefined Coordination Geometries" (in en). Journal of the American Chemical Society 145 (26): 14208–14214. doi:10.1021/jacs.3c04047. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:37352018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனைல்சிலேன்&oldid=3920099" இலிருந்து மீள்விக்கப்பட்டது