ஏட்டு அணைவுச்சேர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதியியலில் ஏட்டு அணைவுச் சேர்மங்கள் (Ate complex) என்பவை இலூயிக் அமிலம் ஒரு காரத்துடன் வினைபுரிந்து உருவாகும் உப்புகளைக் குறிக்கும் பெயராகும். இங்கு மைய அணுவானது அதனுடைய இணைதிறனை உயர்த்திக் கொள்கிறது[1]. இவ்வரையறையில் கூறப்பட்டுள்ள இணைதிறன் என்பது அணைவு எண்ணுக்குச் சமமாக இருக்கும் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும். வேதியியல் பெயரிடலில் பெரும்பாலும் ஏட்டு என்ற முற்றுப்பெறா சொல் சேர்மத்தில் உள்ள தனிமத்தின் பின்னொட்டாகச் சேர்க்கப்படும். உதாரணமாக, போரான் சேர்மத்தின் ஏட்டு அணைவுச்சேர்மம் போரேட்டு என அழைக்கப்படுகிறது. இவ்வாறே மும்மெத்தில்போரேன் மற்றும் மெத்தில் இலித்தியம் முதலான சேர்மங்கள் இரண்டும் வினைபுரிந்து ஏட்டு அணைவுச்சேர்மமான Me4B−Li+ உருவாகிறது. இவ்வணைவுச் சேர்மத்தை இலித்தியம் நான்குமெத்தில் போரேட்டு என்று அழைப்பர். கியார்க்கு விட்டிக் 1958 ஆம் ஆண்டில் இவ்வடிப்படையை அறிமுகப்படுத்தினார்[2][3]. ஏட்டு என்ற பின்னொட்டுப் பெயரானது 2, 11 மற்றும் 12 தொகுதிகளைச் சார்ந்த தனிமங்களுக்கு ஒதுக்கப்பட்டதாகும்[4]

ஏட்டு அணைவுச் சேர்மங்கள் ஓனியம் சேர்மங்களின் தலைகீழ் ஒப்புமைச் சேர்மங்கள் ஆகும். இலூயிக் அமிலம் ஏட்டு அயனிகளை உருவாக்கும் போது மைய அணு மேலும் ஒரு பிணைப்பைப் பெற்று எதிர் எதிர்மின்னயனியாகிறது. இலூயிக் காரம் ஒனியம் அயனிகளை உருவாக்கும் போது மைய அணு மேலும் ஒரு பிணைப்பைப் பெற்று நேர் நேர்மின்னயனியாகிறது[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Advanced organic Chemistry, Reactions, mechanisms and structure 3ed. Jerry March ISBN 0-471-85472-7
  2. G. Wittig (1958). "Komplexbildung und Reaktivität in der metallorganischen Chemie". Angewandte Chemie 70 (3): 65. doi:10.1002/ange.19580700302. 
  3. Wittig, Georg (1966). "The role of ate complexes as reaction-determining intermediates". Quarterly Reviews, Chemical Society 20 (2): 191. doi:10.1039/QR9662000191. 
  4. Encyclopedia of Inorganic Chemistry, 1994, John Wiley and Sons, ISBN 0-471-93620-0
  5. Advanced Organic Chemistry: Reactions and mechanisms, Maya Shankar Singh, 2007, Dorling Kindersley, ISBN 978-81-317-1107-1

.