பீக்கிங் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 39°59′23″N 116°18′19″E / 39.98972°N 116.30528°E / 39.98972; 116.30528

பீக்கிங் பல்கலைக்கழகம்
北京大学
Peking University seal.svg
முந்தைய பெயர்s
பீக்கிங்கின் இம்பீரியல் பல்கலைக்கழகம் [1]
வகைஅரசுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1898
தலைவர்வங் எங்கே
கல்வி பணியாளர்
4,206[2]
பட்ட மாணவர்கள்15,128[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்15,119[2]
அமைவிடம்ஹைடியன் மாவட்டம், பெய்ஜிங், சீன மக்கள் குடியரசு
வளாகம்நகர்ப்புறம், 273 ha (670 ஏக்கர்கள்)
சேர்ப்புபன்னாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, கிழக்கு ஆசியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, பசிபிக் ரிம் பல்கலைக்கழகங்களின் சங்கம், பெசெதோகா பல்கலைக்கழகங்கள், சி9 லீக்
இணையதளம்www.pku.edu.cn
பல்கலைக்கழகத்தின் மேற்கு வாயில்

பீக்கிங் பல்கலைக்கழகம் (Peking University), சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள பல்கலைக்கழகம். சீனாவின் முதல் தேசியப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது. 1898 ஆம் ஆண்டில், பீக்கிங்கின் இம்பீரியல் பல்கலைக்கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது.[3] இன்றளவில், சீனாவின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.[4][5][6]

சீனாவின் முக்கிய நபர்கள் பலர் இங்கு படித்தவர்களே. இவர்களில் லூ சுன், மா சே துங், கு ஹோங்மிங், ஹு சிஹ், லி டசாவோ, சென் டுக்சியு.[7]. சீனாவின் புதுப் பண்பாட்டு இயக்கம், மே நான்கு இயக்கம், 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகியவற்றில் இந்த பல்கலைக்கழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.[8]

வரலாறு[தொகு]

வளாகம்

1898, ஜூலை 3 ஆம் நாள் நிறுவப்பட்டப்போது, இம்பீரியல் யுனிவர்சிட்டி ஆஃப் பீக்கிங் எனப் பெயரிடப்பட்டது. நூறு நாள் சீர்திருத்தத்தின் காரணமாக தேசிய கல்வி நிறுவனத்திற்கு மாற்றாக இது அமைக்கப்பட்டது. 1912 ஆம் ஆண்டில், சின்ஃகாய் புரட்சியைத் தொடர்ந்து, தேசிய பீக்கிங் பல்கலைக்கழம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1917 ஆம் ஆண்டில், கல்வியாளர் சை யுவான்பேய் இதன் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், 14 துறைகளுடனும், 2,000 மாணவர்களுடன் பெரிய பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. இவர் லூ சுன், சென் டுக்சியு, ஹு சிஹ் உள்ளிட்ட அறிவார்ந்த நபர்களைத் தேர்ந்தெடுத்தார்.

1919 ஆம் ஆண்டில், பீக்கிங் பல்கலைக்கழக மாணவர்கள், மே நான்கு போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தைத் தொடர்ந்து, பெய்யாங் அரசு பல்கலைக்கழகத்தை மூட நேர்ந்தது. 1920 ஆம் ஆண்டில் பெண்களையும் மாணவர்களாக ஏற்றுக் கொண்டது.

1937 ஆம் ஆண்டில் ஏற்பட்ட, இரண்டாம் சீன-சப்பானிய போரைத் தொடந்து, பீக்கிங் பல்கலைக்கழகம் சாங்‌ஷா என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. இட்சிங்குவா பல்கலைக்கழகம், நங்காய் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு, தற்காலிகமாக சங்ஷா பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.

1938 இல், மீண்டும் இந்த மூன்றும் குன்மிங் நகருக்கு மாற்றப்பட்டு, ஒருங்கிணைந்த தென்மேற்கு தேசியப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், 1946 இல், பெய்ஜிங் நகருக்கு மாற்றப்பட்டது. அப்போது, கலை, அறிவியல், சட்டம், மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட துறைகள் இருந்தன. ஏறத்தாழ 3,000 மாணவர்கள் கல்வி கற்றனர்.

மக்கள் சீனக் குடியரசு உருவான பின், 1952 ஆம் ஆண்டில், யென்ச்சிங் பல்கலைக்கழகம், பீக்கிங் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதே ஆண்டில், காடுவளத்திற்கான துறை நீக்கப்பட்டு, இட்சிங்குவா, பெய்ஜிங் பல்கலைக்கழகங்களுடன் சேர்க்கப்பட்டு பெய்ஜிங் வனவளப் பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.

சீனப் பண்பாட்டுப் புரட்சி, பீக்கிங் பல்கலைக்கழகத்தையும் பாதித்தது. 1966 - 1970 ஆண்டுகளுக்கு இடையில் கல்வி பாதித்தது. 2000 ஆம் ஆண்டில், பெய்ஜிங் மருத்துவப் பல்கலைக்கழகம், பீக்கிங் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. பீக்கிங் பல்கலைக்கழக உடல்நலக் கல்வி வளாகம் எனப் பெயர் பெற்றது. தற்போது, பீக்கிங் பல்கலைக்கழகத்துடன் எட்டு மருத்துவமனைகளும், 12 மருத்துவக் கல்லூரிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

கல்வி[தொகு]

பல்கலைக்கழகத்தின் வடக்கில் உள்ள வெய்மிங் ஆறு
நிர்வாகக் கட்டிடம்
பல்கலைக்கழகம்
கல் பாலம்

பல்கலைக்கழகத்தில் 30 கல்லூரிகளும், 12 துறைகளும் உள்ளன. இதுதவிர, 216 ஆய்வு நிறுவனங்களும், 12 தேசிய ஆய்வுக்கூடங்களும் உள்ளன. இங்குள்ள நூலகம், 4.5 மில்லியன் நூல்களுடன் ஆசியாவிலேயே பெரிய நூலகமாகத் திகழ்கிறது.[9] இங்கு சமூக அறிவியல், மேலாண்மை & கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கல்வி கற்றுத் தருகின்றனர்.

இங்கு படித்த 400 மாணவர்கள், பிற சீனப் பல்கலைக்கழகங்களின் தலைவர்களாகப் பதவி வகித்திருக்கின்றனர்.[10] 2010 ஆம் ஆண்டில், சீனப் பல்கலைக்கழக பழைய மாணவர்களின் கூட்டமைப்பு, இதை சீனாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாக அறிவித்தது.[4]

குறிப்பிடத்தக்க மாணவர்களும் நிர்வாகிகளும்[தொகு]

இங்கு படித்த மானவர்கள் பலர், சீனாவின் பல்வேறு துறைகளில் தலைவர்களாக உள்ளனர். இவர்களுள் ஹு சிஹ், லி டாழாவோ, லூ சுன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு படித்த இட்சுங் டாவோ லீ, யாங் சென் நிங் ஆகிய இரண்டு மாணவர்களும் நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். 1948, ஆண்டு முதல் பல மாணவர்களை சீன அறிவியல் கழகம் தேர்ந்தெடுத்துள்ளது.[11] ஹாவோ பிங் என்ற மாணவர், தற்போதைய சீன அரசின் கல்வி அமைச்சகத்தின் துணைத் தலைவராக உள்ளார். சுதந்திரமான, பொதுவுடைமை ஆகிய கொள்கைகள் இங்கு உதித்தவையே [8] மா சே துங், சென் டுக்சியு, லி டாழாவோ உள்ளிட்ட கம்யூனிச தலைவர்கள் இங்கு படித்தவர்களே. இங்கு படித்த மாணவர்களால் 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கப்பட்டன.

வளாகம்[தொகு]

பல்கலைக்கழக வளாகம், சிங் அரசமரபுவழியைச் சேர்ந்த அரச தோட்டத்தில் அமைந்துள்ளது. சீன கட்டிடக்கலைப் பாணி பெரிதும் பின்பற்றப்பட்டுள்ளது. வளாகத்திற்கு கிழக்கு, மேற்கு, தெற்கு வாயில்கள் உள்ளன. வெய்மிங் ஏரியும், தோட்டங்களும் அருகில் உள்ளன. வளாகத்திலேயே வரலாற்று நினைவு அருங்காட்சியகம் உள்ளது. ஆர்த்தர் சாக்லர் தொல்பொருளியல் ஆய்வகமும் உள்ளது.[12][13] பல்கலைக்கழகத்தின் உடல்நலக் கல்வி மையம், இட்சூய் யுவான் சாலையில் உள்ளது.

2008 ஆம் ஆண்டில், உலகப் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில், 23வது என தேர்ந்தெடுத்துள்ளனர். ஆசியக் கண்டத்திலேயே முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்று எனவும் குறிக்கப்பட்டுள்ளது.[14]

சீன மொழி இலக்கியம், கலை ஆகியவற்றுக்கு இப்பல்கலைக்கழகம் பெரிதும் பங்களித்துள்ளது.[15] கூட்டு ஆராய்ச்சிகளில் சிக்காகோ பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து செயல்பட்டுள்ளது.[16]

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து பண்பாட்டுப் படிப்புக்களை வழங்குகிறது. இசுட்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் சீன பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைக் கற்கின்றனர்.[17]

பன்னாட்டு மாணவர்கள்[தொகு]

ஏறத்தாழ 2,000 வெளிநாட்டு மாணவர்கள் இங்கு கற்கின்றனர். இதனுடன் கோர்னெல் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், இலண்டன் பொருளாதாரப் பள்ளி, இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம், ஹாங்காங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல்வேறு துறைகளில் படிப்புகளை வழங்குகிறது.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]