உள்ளடக்கத்துக்குச் செல்

புதுப் பண்பாட்டு இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுப் பண்பாட்டு இயக்கம் (New Culture Movement) (சீனம்: 新文化运动; பின்யின்: Xīn Wénhuà Yùndòng) என்பது 1910 நடுவில், 1920 களில் சீனாவில் உருப்பெற்ற ஒரு இலக்கிய இயக்கம் ஆகும். சீனாவின் மரபு சார், கன்பூசியப் பண்பாட்டீன் மீது வெறுப்படைந்து, அப்போது தோற்றுவிக்கப்பட்ட சீனக் குடியரசு மீதும் வெறுப்படைந்து இந்த இயம் தோன்றியது. இவர்கள் ஒரு புதுச் சீனப் பண்பாட்டை, உலக மற்றும் மேற்குலக அடிப்படைகளுக்கு அமைய, குறிப்பாக மக்களாட்சி, அறிவியல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த இலக்கிய இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. இதில் Chen Duxiu, Cai Yuanpei, Li Dazhao, Lu Xun, and Hu Shi போன்றோர் சில முக்கிய எழுத்தாளர்கள் ஆவர்கள்.

இவர்களின் கொள்கைகளாக பின்வருவன இருந்தன:

  • தாய் மொழியில் இலக்கியம்
  • ஆண் ஆதிக்க குடும்ப முறை எதிர்ப்பு, தனிமனித சுதந்திரம், பெண்கள் உரிமைகள் ஆதரவு
  • சீனாவை உலகின் நாடுகளில் ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளல், கன்பூசியப் பண்பாட்டால் சீனாவே உயர்வு பெற்றது என்பதை விடுதல்
  • மரபு இலக்கியங்களை, வரலாற்றை, முறைமைகளை மீளாய்வு செய்தல்