பி. வி. ராஜேஸ்வர் ராவ்
Appearance
பி.வி.ராஜேஸ்வர் ராவ் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1996–1998 | |
முன்னையவர் | பி. தத்தாத்திரேயா |
பின்னவர் | பி. தத்தாத்திரேயா |
தொகுதி | செகந்தராபாது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பாமுலபர்த்தி வெங்கட ராஜேஸ்வர் ராவ் 14 ஆகத்து 1946 வங்காரா, கரீம்நகர், ஐதராபாத் இராச்சியம் |
இறப்பு | 12 திசம்பர் 2016 ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா | (அகவை 70)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் |
|
உறவினர் | சுரபி வாணி தேவி (சகோதரி) |
வாழிடம்(s) | ஆதர்ஷ் நகர், ஐதராபாத்து |
முன்னாள் கல்லூரி | விவேகவர்த்தினி சட்டக்கல்லூரி |
வேலை | வழக்குறைஞர் அரசியல்வாதி |
பாமுலபர்த்தி வெங்கட ராஜேசுவர் ராவ் (Pamulaparthi Venkata Rajeshwar Rao) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக மக்களவையில் ஆந்திர பிரதேசத்தின் செகந்திராபாத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] [2] [3]
இவர் இந்தியாவின் முன்னாள் இந்தியப் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவின் மகன் ஆவார். [4]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர், ஐதராபாத் இராச்சியம், கரீம்நகர் மாவட்டத்திலுள்ள வங்காரா கிராமத்தில் பி. வி. நரசிம்ம ராவ் மற்றும் அவரது மனைவி சத்யம்மா ஆகியோருக்குப் பிறந்தார். இவர் உசுமானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். இவருக்கு பி. வி. ரங்காராவ் மற்றும் பி.வி.பிரபாகர் ராவ் என்ற இரு சகோதரர்கள் இருந்தனர்.