பி. சி. இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. சி. இராமசாமி (P. C. Ramasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். ஈரோடு மாவட்டத்தினைச் சார்ந்த இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இவர், 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அமைச்சராக[தொகு]

இராமசாமி, ஜெ. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "🗳️ Ramasami P C, Modakurichi Assembly Elections 2001 LIVE Results". LatestLY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-28.
  2. "அ.தி.மு.க., மாஜி மீது பாய்ந்தது வழக்கு". Dinamalar. 2020-05-14. பார்க்கப்பட்ட நாள் 2022-03-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சி._இராமசாமி&oldid=3601733" இலிருந்து மீள்விக்கப்பட்டது