பில்லி ஜீன் கிங்
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
---|---|
வாழ்விடம் | ஐக்கிய அமெரிக்க நாடு |
உயரம் | 5 அடி 4½ அங்(164 செமீ) |
தொழில் ஆரம்பம் | 1968 |
இளைப்பாறல் | 1983 |
விளையாட்டுகள் | வலது கை ஆட்டக்காரர் |
பரிசுப் பணம் | அமெரிக்க $1,966,487[1] |
Int. Tennis HoF | 1987 (member page) |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 695–155 (பெண்கள் டென்னிசு சங்க வலைத்தள தரவுப்படி)[1] |
பட்டங்கள் | 129 (84 டென்னிசு அனைத்துத் தரப்பினருக்குமான பிறகு) |
அதிகூடிய தரவரிசை | 1 (1966, 1967, 1968, 1971, 1972, 1974) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | W (1968) |
பிரெஞ்சு ஓப்பன் | W (1972) |
விம்பிள்டன் | W (1966,1967, 1968, 1972, 1973, 1975) |
அமெரிக்க ஓப்பன் | W (1967, 1971, 1972, 1974) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 87–37 (பெண்கள் டென்னிசு சங்க வலைத்தள தரவுப்படி)[1] |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | F (1965, 1969) |
பிரெஞ்சு ஓப்பன் | W (1972) |
விம்பிள்டன் | W (1961, 1962, 1965, 1967, 1968, 1970, 1971, 1972, 1973, 1979) |
அமெரிக்க ஓப்பன் | W (1964, 1967, 1974, 1978, 1980) |
கலப்பு இரட்டையர் | |
சாதனைகள் | n/a |
பட்டங்கள் | 11 |
பெருவெற்றித் தொடர் கலப்பு இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | W (1968) |
பிரெஞ்சு ஓப்பன் | W (1967, 1970) |
விம்பிள்டன் | W (1967, 1971, 1973, 1974) |
அமெரிக்க ஓப்பன் | W (1967, 1971, 1973, 1976) |
இற்றைப்படுத்தப்பட்டது: பெப்ரவரி 7, 2008. |
பில்லி ஜீன் கிங் (Billie Jean King) (இயற்பெயர் மோஃபிட்; பிறப்பு லாங் பீச் (கலிபோர்னியா)வில் நவம்பர் 22, 1943) ஓர் முன்னாள் அமெரிக்க தொழில்முறை டென்னிசு வீராங்கனை.அவர் பெருவெற்றித்தொடர் (கிராண்ட் சிலாம்) போட்டிகளில் 12 ஒற்றையர் பட்டங்கள்,16 இரட்டையர் பட்டங்கள் மற்றும் 11 கலந்த இரட்டையர் பட்டங்கள் என மொத்தம் 39 கோப்பைகளை வென்றுள்ளார். சமூகம் மற்றும் விளையாட்டுக்களில் பெண்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.1973ஆம் ஆண்டில் இருபாலர் போர் என்று ஊடகங்களில் விவரிக்கப்பட்ட போட்டியொன்றில் 55 வயது பாபி ரிக்சு என்ற முன்னாள் விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் சாதனையாளரை வென்றார்.[2] இவர் அமெரிக்காவின் சார்பாக அடிக்கடி பெடரேசன் கோப்பையிலும் விங்ட்மேன் கோப்பையிலும் விளையாடுவார். ஏழுமுறை பெடரேசன் கோப்பையையும் விங்ட்மேன் கோப்பையையும் வென்ற அமெரிக்க அணியில் இருந்துள்ளார். மூன்று முறை பெடரேசன் கோப்பையில் அமெரிக்க அணிக்கு தலைவராக இருந்துள்ளார். இவர் பெண்கள் டென்னிசு அமைப்பு, பெண்கள் விளையாட்டு கழகம் என்ற இரு அமைப்புகளை உருவாக்கினார்.
பலரால் இதுவரை இருந்தவர்களில் சிறந்த டென்னிசு வீரர் என கருதப்படுகிறார். 1972இல் இச்சான் வுட்டன் என்பவருடன் இணைந்து இசுபோர்ட்சு இல்லசுடிரேட்டட் வீக்கிலி என்ற இதழின் வெற்றியாளர் விருதையும் 1975 இல் டைம் இதழின் ஆண்டுக்கான மனிதர் என்ற சிறப்பையும் பெற்றார். பிரசிடெண்ட் மெடல் ஆப் பிரிடம் என்ற அமெரிக்காவின் உயரிய விருதையும் சண்டை டைம்சு இதழின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றார். 2006இல் நியூ யார்க்கிலுள்ள யூஎசு ஓப்பன் நடைபெறும் திடல்களின் மையத்திற்கான பெயர் பெல்லி சீன் கிங் தேசிய டென்னிசு மையம் என மாற்றப்பட்டது.
இளவயது வாழ்க்கை
[தொகு]கிங் பெட்டிக்கும் தீயணைப்பு வீரரான பில் மோட்டிவ்க்கும் லாசு ஏஞ்சல்சு பெருநகரிலுள்ள லாங் பீச்சில் மரபு மாறா மெதடிசம் குடும்பத்தில் பிறந்தார். கிங்கின் குடும்பம் விளையாட்டில் ஆர்வமுள்ளது. இவரின் தாய் நீச்சலில் சிறந்தவர். தந்தை கூடைபந்து அடிப்பந்தாட்டம் (baseball) வீரரும் ஓட்ட வீரரும் ஆவார், இவரின் இளைய சகோதரர் ரேண்டி மோட்டிவ் ஊசுடன் அசுட்ரோசு, சான் பிரான்சிசுகோ செயண்ட், டோறண்டோ புளு சேசு போன்ற பெரும் அடிபந்தாட்ட கூட்டமைப்பில் 12 ஆண்டுகள் பந்துவீச்சாளராக இருந்தார். பெல்லி சீனும் அடிப்பந்தாட்டத்தில் (பெண்களுக்கானது பந்து ஆண்களுக்கானது போல் கடினமாக இருக்காது) வல்லவராக இருந்தார். 10 வயது சிறுமியாக இருந்தபோது அவரை விட 4-5 வயது பெரியவர்களின் குழுவில் மாற்று ஆட்டக்காரக இருந்தார். அந்த அணி லாங் பீச்சில் பல அணிகள் கலந்து கொண்ட அடிபாந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்றது.
பெண்களுக்கான சிறந்த விளையாட்டை பெல்லி சீன் தேர்ந்த்தெடுக்க விரும்பிய போது பெற்றோரின் அறிவுரைப்படி பெல்லி சீன் 11 வயதில் அடிபந்தாட்டத்தில் இருந்து டென்னிசுக்கு மாறினார். எட்டு டாலரை சேமித்து தன் முதல் டென்னிசு மட்டையை வாங்கினார். லாங் பீச்சிலுள்ள பல பொது விளையாட்டரங்குகளில் டென்னிசை கற்றார். பொது விளையாட்டரங்குகளில் காசு பெறாமல் தொழில் முறை டென்னிசு ஆட்டக்காரர் கிளைட் வால்கர் வழங்கிய பயிற்சிகளை பயன்படுத்தி டென்னிசின் நுணுக்கங்களை கற்றார். சிறுமியாக இருந்த போது இவரது தீவிரமாக ஆடும் பாணி இவருக்கு இடையூறாக இருந்ததபோதும் அப்பாணியை மாற்றாமல் பின் வெற்றிகளை பெற்றார்.
பெல்லி சீன் லாங் பீச் பல்நுட்பியல் கல்லூரியில் படித்தார் பின் லாசு ஏஞ்சல்சிலுள்ள கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் படித்தார். 1964இல் டென்னிசில் முழு கவனத்தையும் செலுத்த படிப்பை முடிக்காமலே வெளியேறினார். பல்கலைக்கழகத்தில் படித்த போது நூலகத்தில் லாரி கிங்கை சந்தித்தார், படிக்கும் போதே அவர்கள் நிச்சயம் செய்து கொண்டார்கள். அப்போது பெல்லி சீனின் வயது 20 லாரி கிங்கின் வயது 19. அவர்கள் 17 செப்டம்பர் 1965இல் லாங் பீச்சில் திருமணம் புரிந்து கொண்டார்கள்.
திருமண வாழ்க்கை
[தொகு]பில்லி சீனும் லாரி கிங்கும் 1964 இல் திருமண உறுதியேற்பு செய்து கொண்டு 1965 நவம்பர் 17இல் லாங் பீச்சில் திருமணம் புரிந்து கொண்டார்கள். பில்லி சீனுக்கு லாரி கிங் பெண்ணியத்தை அறிமுகப்படுத்தியதோடு டென்னிசை தொழிலாக கொள்ள ஊக்கப்படுத்தினார். பில்லி சீன் தான் திருமணம் புரிந்த சமயம் லாரியுடன் மிகுந்த காதல் கொண்டிருந்ததாக பின் கூறினார்.
1968இல் கிங் தான் பெண்களின் மீது ஈர்ப்பு கொண்டிருப்பதை உணர்ந்தார். 1971இல் தன் செயலாளர் மர்லின் பர்நெட்டுடன் உடல் அளவிலும் நெருக்கமான உறவு வைத்திருந்தார். மர்லின் 1948இல் பிறந்தவர். இவர்கள் உறவு பொதுவுக்கு பர்நெட் பில்லி கிங்கின் சொத்தில் பங்கு கேட்டபின் வந்தது, வந்தபின் பில்லி கிங் இந்த உறவை ஒப்புக்கொண்டார். பில்லி கிங்கே ஆண் பெண் உறவு வைத்திருந் முதல் தொழில் முறை ஆட்டக்கார பெண் என இந்த வழக்கால் அறியப்படுகிறார். இந்த வழக்குக்கு ஓர் ஆண்டு முன்பு தான் தான் மாற்று பால் இனத்தவர் என்று அறிகிறார். முழு உறவையும் வெளியில் சொல்லாமல் ஒரு முறை மட்டும் தவறு நேர்ந்ததாகவும் பொதுவில் கூறினார். அப்போதும் லாரி கிங்குடன் மண வாழ்வு தொடர்ந்தது. இந்த வழக்கால் பில்லி கிங்குக்கு 2 மில்லியன் டாலர் விளம்பரதாரர்கள் இவரிடம் இருந்து விலகியதின் மூலம் இழப்பு ஏற்பட்டது மேலும் வழக்கறிஞருக்கு பணம் தரவேண்டி இவர் அதிக காலம் டென்னிசு விளையாடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்.
சொத்து கேட்டு பர்நெட் தொடர்ந்த வழக்கு முடியும் வரை பில்லி சீனும் லாரி கிங்கும் கணவன் மனைவியாகவே இருந்தார்கள். 1987இல் பில்லி சீன் தன் டென்னிசு இரட்டையர் இணை இலனா கிலாசுடன் காதலில் விழுந்ததும் பில்லி சீன் லாரி கிங் திருமண வாழ்வு முறிந்தது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Women's Tennis Association biography of Billie Jean King". Archived from the original on 2009-07-05. பார்க்கப்பட்ட நாள் 2010-09-03.
- ↑ "Billie Jean Won for All Women". பார்க்கப்பட்ட நாள் 2007-02-15.