பிலிபித் புலிகள் காப்பகம்

ஆள்கூறுகள்: 28°41′31″N 79°51′11″E / 28.692°N 79.853°E / 28.692; 79.853
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிபித் புலிகள் காப்பகம்
Pilibhit Tiger Reserve
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
பிலிபித் புலிகள் காப்பகத்தில் காடு
Map showing the location of பிலிபித் புலிகள் காப்பகம் Pilibhit Tiger Reserve
Map showing the location of பிலிபித் புலிகள் காப்பகம் Pilibhit Tiger Reserve
Map showing the location of பிலிபித் புலிகள் காப்பகம் Pilibhit Tiger Reserve
Map showing the location of பிலிபித் புலிகள் காப்பகம் Pilibhit Tiger Reserve
அமைவிடம்பிலிபித் மாவட்டம்
ஆள்கூறுகள்28°41′31″N 79°51′11″E / 28.692°N 79.853°E / 28.692; 79.853
அறிவிக்கப்பட்டதுசூன் 2014
நிருவாக அமைப்புதேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம்
வலைத்தளம்https://pilibhittigerreserve.in/

பிலிபித் புலிகள் காப்பகம் (Pilibhit Tiger Reserve) இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் இது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.[1] இக்காப்பகம் இந்தியா - நேபாள எல்லையில் மேல் கங்கை சமவெளியில் உள்ள தெராய் வளைவு நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். இந்த வாழ்விடத்தின் சிறப்பியல்புகள் சால் காடுகள் , உயரமான புல்வெளிகள், சதுப்பு நிலங்கள் , அவ்வப்போது ஆறுகளில் இருந்து வரும் வெள்ளத்தால் வளமாக்கப்படுகின்றன. இங்குள்ள. சார்தா சாகர் அணை 22 கிமீ (14 மைல்) நீளம் வரை நீண்டு உள்ளது.[2]

உத்தரப்பிரதேசத்தில் நன்கு காடுகள் நிறைந்த சில மாவட்டங்களில் பிலிபித் ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி பிலிபித் மாவட்டத்தில் 800 km2 (310 sq mi) சதுர கிலோமீட்டருக்கும் ( மைல்) அதிகமான காடுகள் உள்ளன , இது மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் சுமார் 23% ஆகும். பிலிபித் காடுகளில் குறைந்தது 65 புலிகளும் ஐந்து வகையான மான்களும் ஓர் ஒரு இரையும் உள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியதற்காக புலிகள் காப்பகத்திற்கு முதல் பன்னாட்டு விருது TX2(டிஎக்ஸ் 2) கிடைத்தது.[3]

2014 ஜூன் மாதம் 46வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்படும் வரை இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதி மரங்கள் விளைவிக்கும் காப்புக்காடாக இருந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Chanchani, P. (2015). "Pilibhit Tiger Reserve: conservation opportunities and challenges". Economic and Political Weekly 50 (20): 19. Chanchani, P. (2015). "Pilibhit Tiger Reserve: conservation opportunities and challenges". Economic and Political Weekly. 50 (20): 19.
  2. "Pilibhit Tiger Reserve". Reserve Guide - Project Tiger Reserves In India. National Tiger Conservation Authority. பார்க்கப்பட்ட நாள் 2012-02-29.
  3. "Pilibhit Tiger Reserve Gets Global Award For Doubling Tiger Population". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-29.

வெளி இணைப்புகள்[தொகு]