உள்ளடக்கத்துக்குச் செல்

பிலிகுண்டுலு

ஆள்கூறுகள்: 12°11′08″N 77°43′56″E / 12.1854461°N 77.7321553°E / 12.1854461; 77.7321553
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிகுண்டுலு
பிலிகுண்டுலு
அமைவிடம்: பிலிகுண்டுலு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°11′08″N 77°43′56″E / 12.1854461°N 77.7321553°E / 12.1854461; 77.7321553
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தர்மபுரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பிலிகுண்டுலு அருகே ஓடும் காவேரி ஆறு

பிலிகுண்டுலு (ஆங்கிலம்: Biligundlu)இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[4][5]

இவ்வூரின் சிறப்பு

[தொகு]

இவ்வூர் கர்நாடகம் மாநில எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில், காவிரி ஆற்றின் கரையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.[6] இது 2013-ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள காவிரி காட்டுயிர் காப்பகத்தின் பகுதியாகும். இது காவிரி நதி தமிழ்நாட்டில் நுழையும் இடத்துக்கு வெகு அருகில் உள்ளது. இந்தப் பகுதிவரை காவிரி மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகிறது. அதனால் வடகரையில் தமிழகமும் தென்கரையில் கருநாடகமும் இருக்குமாறு அமைந்துள்ளது. ஆறு எல்லைக்கோடாக உள்ள இடம் இது. இருபுறமும் இருமாநிலங்களின் காட்டுப் பகுதிகள் உள்ளன. இவ்விடத்தை அடுத்து காவிரியின் போக்கு நெற்கில் செல்கிறது. ஒகேனக்கல் அருவி இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் தெற்கில் உள்ளது.

இங்கு தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி ஆற்று நீரின் அளவு மத்திய நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகளால் அளவிடப்படுகிறது.[7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-07-08.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-07-08.
  6. Staff Reporter (2012-10-02). "Water reaches Biligundlu" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Water-reaches-Biligundlu/article12542638.ece. 
  7. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தினமணி
  8. Water reaches Biligundlu The Hindu


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிகுண்டுலு&oldid=4259477" இலிருந்து மீள்விக்கப்பட்டது