பிறவி வளைபாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிறவி வளைபாதம்
Clubfoot
ஒத்தசொற்கள்Clubfoot, congenital talipes equinovarus (CTEV)[1]
Pied bot, varus équin (bilateral).jpg
இரு வளைபாதங்கள்
சிறப்புஎலும்பு அறுவைச் சிகிச்சை
அறிகுறிகள்உள்நோக்கி திரும்பிய பாதம்[1]
வழமையான தொடக்கம்கருவில் இருக்கும்போது[1]
காரணங்கள்அறியவில்லை[1]
சூழிடர் காரணிகள்மரபியல், கருவுற்ற காலத்தில் தாய் புகைப்பிடித்தல்[1]
நோயறிதல்பரிசோதனை, மீயொலி[1][2]
ஒத்த நிலைமைகள்புறாக்காற்பன்றி[3]
சிகிச்சைஎதிர்க்களித்தல் முறை (மூட்டு இழுத்துப்பொருத்தல், மாவுக்கட்டு, குதிநாணை வெட்டுதல், இறுக்குதல்), பிணைச்சட்டம், அறுவைச் சிகிச்சை[1][2]
முன்கணிப்புசிகிச்சையால் நல்ல நிலை[2]
நிகழும் வீதம்1,000இல் ஒருவர்[2]

பிறவி வளைபாதம் அல்லது பிறவிக் கோணல் அடிக்கால் (Clubfoot) என்பது ஒரு பிறவிக் குறை ஆகும். இந்த பாதிப்போடு பிறந்தவர்களின் ஒரு பாதமோ அல்லது இரு பாதங்களோ கீழே பக்கவாட்டாக அல்லது மேல்நோக்கி அல்லது உள்நோக்கி திரும்பி இருக்கும்.[1][4] பாதிக்கப்பட்ட காலானது, மற்ற சாதாரணக் காலைவிட சிறியதாக இருக்கும். இந்த பாதிப்பு உள்ளவர்களில் பாதிபேருக்கு இரு கால்களும் இந்த பாதிப்புக்கு ஆளாகுகிறது. இந்த பாதிப்புக்கு ஆளான பெரும்பாலானவர்களுக்கு உடன் பிற சிக்கல்கள் இருப்பது இல்லை. சிகிச்சை அளிக்கப்படாத பிறவி வளைபாதம் கொண்ட குழந்தையின், கால் வெளி விளிம்பில் நடக்கும் பொழுது சில சிக்கல்கள் ஏற்படும்.

இது ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. சிலசமயம் மூட்டு மடக்கம் மற்றும் பிளந்தமுள் ஆகியவற்றின் தொடர்பு இருக்கலாம். இந்த பாதிப்பு இரட்டைக் குழந்தைகளுக்கு ஏற்படும்போது, இந்தபாதிப்பில்லாமல் நல்லபடியாக இருக்க இன்னொரு குழந்தைக்கு 33% வாய்ப்பு உள்ளது. பிறவி வளைபாதம் பிறந்த நேரத்தில் கண்டறியப்படுகிறது என்றாலும், பல சந்தர்ப்பங்களில் கருவிலேயே அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் என்னும் மீயொலி பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது.

பிறவி வளைபாதம் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் வழக்கமாக பிறந்ததில் இருந்தே தசை நீட்சி, மாவுக்கட்டு, பிணைச்சட்டம் போன்றவற்றின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுப் படிப்படியாக சரி செய்யப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் குதிகாலின் தசைநாரானது தொடர்ந்து இறுக்கம் அடைகிறது. இதனை விடுவிக்க ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்த சிகிச்சையின்போது மருத்துவரால் மிக மெல்லிய கருவியால் தசைநார் வெட்டப்படுகிறது. இந்தக் காயமானது தையல் போட தேவையிலாத அளவு மிகச் சிறியதாக இருக்கும். காயம் ஆறும் வரை அந்த தசைநாரைப் பாதுகாக்க மாவுக்கட்டு போடப்படும். மாவுக்கட்டு நீக்கப்பட்ட நேரத்தில், குதிகால் தசைநார் சரியாக நீண்டு பிறவி வளைபாதம் முழுமையாக சரி செய்யப்படுகிறது.  குழந்தைக்கு ஒரு சில ஆண்டுகளுக்கு  பிரேஸ் என்னும் பிணைச்சட்டம்  அணிவிக்கப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் நான்கு ஆண்டுகள் இந்த பிணைச்சட்டத்தை அணியவேண்டி இருக்கும். பிணைச்சட்டத்தை  பராமரிக்கும் விதத்தில் சரியான கோணத்தில் கால் இருக்கும்படி அவ்வப்போது திருத்தி அமைக்கப்படும். இந்த பிணைச்சட்டத்தை இரவு நேரங்களில் பெரும்பாலும் பயன்படுத்த வேண்டும். சுமார் 20% பேருக்கு, மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

புதியதாக பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வளைபாதம் ஏற்படுகிறது. பிறவி வளைபாதம் குறைபாடு ஏற்பட பெண்களை விட ஆண்களுக்கு இரண்டு மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Gibbons, PJ; Gray, K (September 2013). "Update on clubfoot.". Journal of paediatrics and child health 49 (9): E434-7. doi:10.1111/jpc.12167. பப்மெட்:23586398. 
  2. 2.0 2.1 2.2 2.3 Dobbs, Matthew B.; Gurnett, Christina A. (18 February 2009). "Update on clubfoot: etiology and treatment". Clinical Orthopaedics and Related Research 467 (5): 1146–1153. doi:10.1007/s11999-009-0734-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:1528-1132. பப்மெட்:19224303. 
  3. "Clubfoot" (en). மூல முகவரியிலிருந்து 15 October 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 October 2017.
  4. "Talipes equinovarus" (en) (2017). மூல முகவரியிலிருந்து 15 October 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறவி_வளைபாதம்&oldid=2585616" இருந்து மீள்விக்கப்பட்டது