பிர்மல் சிங் தௌலா
பிர்மல் சிங் தௌலா Pirmal Singh Dhaula | |
---|---|
பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2017–2021 | |
முன்னையவர் | சந்த் பல்பீர் சிங் குனாசு |
பின்னவர் | லப் சிங் உகோகே |
தொகுதி | பதாவுர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 செப்டம்பர் 1980 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு ஆம் ஆத்மி கட்சி (2021 வரை) |
வாழிடம் | பர்னாலா |
தொழில் | அரசியல்வாதி |
பிர்மல் சிங் தௌலா (Pirmal Singh Dhaula) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] முதலில் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில், பதாவுர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் தனது பதவியிலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.[2]
பிர்மல் சிங் தௌலா பதாவுர் சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக, பஞ்சாப் சட்டப் பேரவையின் தற்போதைய உறுப்பினரான சிரோமணி அகாலி தளத்தின் சந்த் பல்வீர் சிங் குனாசை 20,784 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இவர் அத்தேர்தலில் வெற்றி பெற்றார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members". punjabassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-08.
- ↑ "After joining Congress, Khaira, 2 AAP rebels resign from Vidhan Sabha". The Indian Express (in ஆங்கிலம்). 2021-06-03. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "BHADAUR Election Result 2017, Winner, BHADAUR MLA, Punjab". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-08.
- ↑ "2017 Bhadaur - Punjab Assembly Election Winner, LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-08.