உள்ளடக்கத்துக்குச் செல்

பிர்தௌசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கீம் அபுயி காசிம் பிர்தௌசி தூசி
Ḥakīm Abu'l-Qāsim Ferdowsī Țusī
حکیم ابوالقاسم فردوسی توسی
பிறப்பு935
தூசு, ஈரான் (சாமனிதுப் பேரரசு)
இறப்பு1025 (அகவை 89–90)
தூசு, ஈரான் (காசனாவிதுப் பேரரசு)
தொழில்கவிஞர்
காலம்சாமனிது, காசனாவிது
வகைபாரசீகப் பாடல், தேசியக் காவியம்

அக்கீம் அபு ஈ-காசின் பிர்தௌசி துசி (கி.பி 935–1025) அல்லது பிர்தௌசி (Hakim Abu ʾl-Qasim Ferdowsi Tusi Firdawsi,[1] ஒரு புகழ்பெற்ற பாரசீகக் கவிஞரும் சாநாமா என்னும் தேசியப் பெருங்காப்பியம் இயற்றிய பாரசீகப் பெரும்பாவலரும் ஆவார். சாநாமா ("Shahnameh") என்பதே உலகின் ஆகப்பெரும் காப்பியம். சாமனிதுப் பேரரசின் காலத்திலும் காசனாவிதுப் பேரரசின் காலத்திலும் அவர் புரவலராக இருந்தபொழுது எழுதப்பெற்றது. பிர்தௌசி பாரசீக மொழியில் மிகவும் செல்வாக்கு மிக்கப் பாவலர்[2]

பெயர்

[தொகு]

இவருடைய குன்யா (அரபி) பெயராகிய அபு-இ.காசிம் ((ابوالقاسم - Abu'l-Qāsim)) என்பதையும் இவருடைய இலக்காபு (laqab) பெயராகிய பிர்தௌசி (ی - Ferdowsī, பொருள்: 'சொர்கம் போன்ற') ஆகியவற்றைத்தவிர இவருடைய முழுப்பெயரைப்பற்றி ஒன்றும் உறுதியாகத்தெரியவில்லை. இவரை முதலிலிருந்தே வேறு பல புகழ்ப்பெயர்களாலும் அழைத்து வந்திருக்கின்றனர். அவற்றுள் ஒன்று மெய்யியலாளர் என்னும் பொருள்படும் அக்கீம் (ஃகக்கீம், Ḥakīm)[3] இதன் அடிப்படையில் இவர் பெயர் வழங்கப்பெறுகின்றது. உரோமன் அல்லது இலத்தீன் எழுத்தில் இவர் பெயர் பலவாறு எழுதப்படுகின்றது. அவற்றுள் சில Firdawsi, Firdusi, Firdosi, Firdausi.[1]

வாழ்க்கை

[தொகு]

குடும்பம்

[தொகு]

பிர்தௌசி நிலபுலங்கள் உள்ள செல்வந்த தெஃகான்கள் (dehqan) குடும்பத்தில் கி.பி. 935 -இலோ கி.பி 940 -இலோ ஈரானில் தூசு (Tus) என்னும் ஊரில் பிறந்தார். இவ்வூர் சாமனிதுப் பேரரசில் கொராசான் என்னும் பகுதியில் இருந்தது. தற்பொழுது ஈரானின் வடகிழக்கே உள்ள இராசாவி கொராசான் மாநிலத்தில் உள்ளது.[4] பிர்தௌசியின் தொடக்ககால வாழ்க்கை பற்றி ஏதும் தெரியவில்லை. நிலக்கிழார்களின் குடும்பங்களில் பிறந்த கல்வியறிவுடைய பெண்ணொருவரை மணந்து ஒரு மகனும் பெற்றிருந்தார். ஆனால் மகன் தன் 37 ஆவது அகவையில் இறந்துபோனார் என்றும், இதனை தான் எழுதிய சாநாமாவில் இரங்கற்பாவாக சேர்த்திருந்தார் என்றும் கருதபப்டுகின்றது.[3]

பிர்தௌசி, சியா பிரிவு இசுலாமியர், இதனை சாநாமாவில் இருந்தே அறியலாம்.[5]. பழைய வரைவுகளில் இருந்தும் இது பெறப்படும்[6] ஆனால் அண்மையில் அவருடைய மத்ம் சியா பிரிவுதானா என்பதில் ஐயம் எழுப்பியிருக்கின்றார்கள்[3]

தாக்கம்

[தொகு]
ஈரானில் பிர்தௌசி பிறந்த தூசி என்னும் இடத்தில் பிர்தௌசியின் நினைவு மண்டபம்
oபிர்தௌசியின் பாடல் ஒன்று: இறைவனின் உளக்குளிர்ச்சியை நினை - அறிவாகவும் உண்மையாகவும் இரு.

பிர்தௌசிக்குப் பாரசீக வரலாற்றில் தனியிடம் உண்டு, ஏனெனில் இசுலாமிய தாக்கத்தால் அரபு மொழி ஓங்கி வளர்ந்திருந்த நாள்களில் பாரசீக மொழிக்கு மறுமலர்ச்சி அளித்து, பாரசீக கலைபண்பாடுகளுக்குப் புத்துயிர் ஊட்டினார். இன்றைய தொடர்ந்த பாரசீக வளார்ச்சிக்கு இவருடைய நூல் பெரும் அடித்தளமாக அமைந்தது.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. இங்கு மேலே தாவவும்: 1.0 1.1 Huart/Massé/Ménage: Firdawsī. In: Encyclopaedia of Islam. New Edition. Brill, Leiden. CD-Version (2011)
  2. Hamid Dabashi (2012). The World of Persian Literary Humanism. Harvard University Press.
  3. இங்கு மேலே தாவவும்: 3.0 3.1 3.2 Irania article "Ferdowsi"
  4. Ferdowsi, Dick Davis (2006). Shahnameh: the Persian book of kings. Penguin.
  5. (ed. Khaleghi, I, pp. 1o-11)
  6. (Neẓāmī ʿArūżī, text, pp. 80, 83; Naṣīr-al-Dīn Qazvīnī, pp. 251–52)

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிர்தௌசி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Wikisourceauthor

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிர்தௌசி&oldid=3690774" இலிருந்து மீள்விக்கப்பட்டது