பிரேவ் உலாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரேவ்
Brave 1.5.115 screenshot macOS.png
மேக்( Mac) இயக்குதளத்தில் பிரேவ் 1.5
மேம்பாட்டாளர்Brave Software, Inc.[1]
நிலையான வெளியீடுஆண்ட்ராய்டு: 1.5.9 மேசைப்பதிப்பு: 1.5.115 / 21 மார்ச்சு 2020
முன்னோட்ட வெளியீடுBeta: 1.7.67 Dev: 1.7.70 Nightly: 1.8.32 / 23 மார்ச்சு 2020
எழுதப்பட்ட மொழிசி (நிரலாக்க மொழி), யாவாக்கிறிட்டு, சி++
இயக்க அமைப்பு
வகைஉலாவி
உரிமம்[2]
வலைத்தளம்brave.com Edit this at Wikidata

பிரேவ் (Brave) என்பது கட்டற்ற, திறமூல உலாவிகளில் ஒன்றாகும். இதனை பிரேவ் மென்பொருளகம் (Brave Software, Inc.) தயாரித்துள்ளது. இந்த உலாவிக்கு அடிப்படையாக குரோமியம் உலாவி திகழ்கிறது. தனிநபர் உரிமையை மிக அதிகமாகக் காக்கும் உலாவிகளில் தலையானது. அதாவது விளம்பரங்களை அனுமதிக்காத, நீங்கள் உலாவும் வலைப்பக்கங்களை மறைமுகாமாகக் கூட குறிப்பெடுக்காத உலாவியாகும். மேலும், உலாவும் இணையப்பக்கப் பங்களிப்பாளர்களுக்கு, ஆல்ட்காயின்களை அனுப்பும் திறன் கொண்டது. 2019 ஆம் ஆண்டு, மைக்ரோசாப்ட் விண்டோசு, மேக் இயக்குதளம், லினக்சு, ஆண்ட்ராய்டு இயங்குதளம், ஐஓஎஸ் ஆகியவைகளுக்கு இதன் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள பதிப்பின் சிறப்பியல்பாக இயல்புநிலை வலை தேடு பொறி , டக்டக்கோ (தேடுபொறி) என்பதைக் கூறலாம்.[3] லினக்சு வகை இயக்குதளங்களில் நிறுவிக் கொள்ளவும் விரிவானக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Company Overview of Brave Software Inc". Bloomberg. 4 April 2018. 13 ஏப்ரல் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "browser-laptop/LICENSE.txt at master". GitHub. 29 June 2017. 13 ஏப்ரல் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. Brave's browser offers you a bit more privacy when searching online, CNET, 14 December 2017, 16 July 2018 அன்று பார்க்கப்பட்டது

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேவ்_உலாவி&oldid=2950886" இருந்து மீள்விக்கப்பட்டது