பிரேக்கிங் பேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரேக்கிங் பேட்
A green montage with the name "Breaking Bad" written on it—the "Br" in "Breaking" and the "Ba" in "Bad" are denoted by chemical symbols
வகை குற்றவியல் நாடகம்
திகில்[1]
தற்கால மேற்கத்திய நாடகம்[2][3]
துயர நகைச்சுவை[4]
வடிவம் தொடர் நாடகம்
தயாரிப்பு வின்சு கில்லிகன்
நடிப்பு பிரியன் கிரான்சுட்டன்
அன்னா கண்
ஏரோன் பவுல்
டீன் நோரிசு
பெட்சி பிரான்ட்
ஆர்ஜே மிட்
பாப் ஓடென்கிர்க்
கியான்கார்லோ எசுபொசிடோ
ஜோனாதன் பாங்க்சு
லாரா பிரேசர்
ஜெஸ் பிளெமொன்சு
துவக்க இசை "பிரேக்கிங் பேட் தீம்"
இசையமைப்பாளர் டேவ் போர்ட்டர்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
பருவங்கள் எண்ணிக்கை 5
மொத்த  அத்தியாயங்கள் 62
தயாரிப்பு
செயலாக்க
தயாரிப்பாளர்(கள்)
வின்சு கில்லிகன்
மார்க்கு ஜான்சன்
மிசேல் மக்லாரென்
ஆசிரியர்(கள்)
 • கெல்லி டிக்சன்
 • இசுகிப் மெக்டொனால்டு
 • லின் வில்லிங்காம்
நிகழ்விடங்கள் ஆல்புகெர்க்கி, நியூ மெக்சிகோ
ஒளிப்பதிவு
 • மைக்கேல் இசுலோவிசு
 • ஜான் டோல் (துவக்க அத்தியாயம்)
ஒளிபரப்பு நேரம் 47–55 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
ஹை பிரிட்ஜ் என்டர்டெயின்மென்ட்
கிரான் வயா புரொடக்சன்
சோனி நிகழ்படத் தொலைக்காட்சி
ஒளிபரப்பு
மூல அலைவரிசை ஏஎம்சி தொலைக்காட்சி
படிம வடிவம் 16:9 உயர் வரையறு தொலைக்காட்சி
மூல ஓட்டம் சனவரி 20, 2008 (2008-01-20) – செப்டம்பர் 29, 2013 (2013-09-29)
கால ஒழுங்கு
தொடர்புள்ள காட்சிகள் பெட்டர் கால் சவுல்
மெடாசுட்டாசிசு
புற இணைப்புகள்
அலுவல்முறை வலைத்தளம்

பிரேக்கிங் பேட் (Breaking Bad) வின்சு கில்லிகனால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட அமெரிக்க குற்றவியல் தொலைக்காட்சி நெடுந்தொடராகும். சனவரி 20, 2008 முதல் செப்டம்பர் 29, 2013 வரை ஐந்து பருவங்களாக ஏஎம்சி தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இதில் முதன்மை நாயகனாக பிரியன் கிரான்சுடோன் நடித்துள்ளார்; வால்ட்டர் வைட் என்ற அறுவை சிகிட்சைக்கு வாய்ப்பில்லாத நுரையீரல் புற்றுநோயால் அவதியுறும் உயர்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியராக இவர் நடித்துள்ளார். தன்னுடைய மரணத்திற்கு முன்னால் தமது குடும்பம் நல்லநிலையில் இருக்க வழிசெய்ய மெத் எனப்படும் மெதாம்பெடமைன் என்ற வேதிப் போதைப் பொருளை தயாரித்து விற்க முற்படுகிறார். இதற்கு இவரது முன்னாள் மாணவர் ஜெஸ் பிங்க்மேனை (ஏரோன் பவுல்) கூட்டு சேர்த்துக் கொள்கிறார். இத்தொலைக்காட்சித் தொடர் நியூ மெக்சிகோவின் ஆல்புகெர்க்கியில் நடப்பதாக அங்கு தயாரிக்கப்பட்டது.

பிரேக்கிங் பேட் அனைத்துக் காலத்திற்கும் சிறந்த தொலைக்காட்சித் தொடராக கருதப்படுகின்றது. தொடரின் முடிவில் அமெரிக்கத் தொலைக்காட்சியின் கம்பிவடத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே மிகவும் பார்க்கப்பட்ட நெடுந்தொடராக அமைந்தது. பல விருதுகளைப் பெற்ற இந்த நெடுந்தொடர் பன்னிருமுறை எம்மி விருதுகளையும் எட்டு முறை செய்மதி விருதுகளையும் இருமுறை கோல்டன் குளோப் விருதுகளையும், மக்கள் தேர்வு விருதையும் பெற்றுள்ளது. 2014இல் அனைத்துக் காலத்தும் மிகவும் உயர்வான தொடராக கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

முதன்மை வேடங்கள்[தொகு]

 • வால்ட்டர் வைட் - வேதியியல் ஆசிரியர். நுரையீரல் புற்றுநோயால் அவதிப்படுபவர்.
 • இசுக்கைலர் வைட் - வால்ட்டரின் மனைவி. வால்ட்டருக்குப் புற்றுநோய் எனக் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே இரண்டாவது சிசுவை கருவில் சுமந்தவர்.
 • ஜெஸ் பிங்க்மேன் - போதை மருந்து விற்பனையாளர். முன்னதாக வால்ட்டரிடம் மாணவராகப் பயின்றவர்.
 • ஹாங்க் இசுச்ரேடர் - இசுக்கைலரின் சகோதரி கணவர்.
 • மாரி இசுச்ரேடர் - இசுக்கைலரின் சகோதரி. ஹாங்கை மணந்தவர். இவருக்கு அனிச்சைத் திருட்டு உளவியல் நோய் உள்ளது.
 • வால்ட்டர் வைட், இளையவர் - வால்ட்டர் & இசுக்கைலரின் மகன். இவருக்கு மூளை முடக்கு நோய் உள்ளது.
 • கஸ்தாவோ "கஸ்" பிரிங் - போதை மருந்து விற்பனையாளர்.

மேற்சான்றுகள்[தொகு]

 1. Poniewozik, James (June 21, 2010). "Breaking Bad: TV's Best Thriller". TIME. பார்த்த நாள் November 5, 2013.
 2. Nevins, Bill (March 27, 2013). "Contemporary Western: An Interview with Vince Gilligan". Local IQ. http://www.local-iq.com/index.php?option=com_content&task=view&id=3019&Itemid=56. பார்த்த நாள்: May 31, 2013. 
 3. "Breaking Bad Finale: Lost Interviews With Bryan Cranston & Vince Gilligan". The Daily Beast. September 29, 2013. http://www.thedailybeast.com/articles/2013/09/29/breaking-bad-finale-lost-interviews-with-bryan-cranston-vince-gilligan.html. பார்த்த நாள்: March 6, 2014. 
 4. பிரேக்கிங் பேடை துயர நகைச்சுவையாக குறிக்கும் சில ஆதாரங்கள் :
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேக்கிங்_பேட்&oldid=2224370" இருந்து மீள்விக்கப்பட்டது