பிரெய்ரி புல்வெளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரெய்ரி, பேட்லாண்ட்சு தேசியப் பூங்கா, தெற்கு டகோட்டா, ஐ.அ.; இங்கு சில உயரமான புல் வெளிகளும் குட்டையான புல் வெளிகளுமாக கலந்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பிரெய்ரி வட்டார வகைகள்
  குட்டை புல்வெளி பிரெய்ரி
  கலவை புல்வெளி பிரெய்ரி
  உயரமான புல்வெளி பிரெய்ரி

பிரெய்ரி புல்வெளிகள் (Prairies, / prɛəri /) என்பது வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு பரந்த புல்வெளி.[1] தென் அமெரிக்காவில் அர்கெந்தீனா, தெற்கு பிரேசில் மற்றும் உருகுவை பகுதிப் புல்வெளியை பம்பாசு என்றும் ஆப்பிரிக்காவின் பகுதிகள் சவான்னா என்றும் குறிப்பிடப்படுகின்றன. ஐரோவாசியா உள்ள புல்வெளிகள் ஸ்டெப்பி புல்வெளிகள். இத்தகைய பகுதிகள் சமவெளிகள். இங்கே மரங்கள் குறைவாக இருப்பதோடு புல்லினங்கள், புதர்கள், குறுமரங்கள் மிகுதியாக இருக்கின்றன.

பிரெய்ரி என்ற சொற்றொடர் கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிக்கோ நாடுகளின் உள்நாட்டுத் தாழ்நிலங்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது. இதில் பெருஞ் சமவெளி முழுமையும் அடங்கும். கிழக்கிலுள்ள சில மலைப்பாங்கான நஞ்சை நிலங்களும் அடங்கும்.

பெயர்க்காரணம்[தொகு]

பிரெய்ரீ என்பது பிரையீயீ என்ற பிரான்சிய சொல்லிலிருந்து பெறப்பட்டது.இதன் வேர்ச்சொல் இலத்தீன் சொல்லான பிரதம் என்பதிலிருந்து உருவானது, அதற்கு "மேய்ச்சலிடம்" என்று பொருள்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://dictionary.reference.com/browse/Prairie?s=t
  2. Roosevelt, Theodore (1889). The Winning of the West: Volume I. New York and London: G. P. Putnam's Sons. பக். 34. 

வெளி இணைப்புகள்[தொகு]