பிரியதர்சினி கோளரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியதர்சினி கோளரங்கம்

பிரியதர்சினி கோளரங்கம் (Priyadarshini Planetarium) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள கோளரங்கமாகும். 1994 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட இந்தக் கோளரங்கமானது நாட்டின் பல்துறை கோளரங்குகளில் ஒன்றாகும்.

இங்கு பூமியின் எந்த ஒரு இடத்திலும், 12,500 ஆண்டுகளுக்கு முந்தைய அல்லது 12,500 ஆண்டுகள் பிந்தை எதிர்காலத்தில் எந்த நாளிலும் நட்சத்திரங்கள் கொண்ட இரவு வானத்தை உருவகப்படுத்த முடியும்.

காட்சி நேரம்; காலை 10.30, மதியம் 12, மாலை 3.5 மணி ஆகும். திங்கள் கிழமைகளில் கோளரங்கம் மூடப்பட்டு இருக்கும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியதர்சினி_கோளரங்கம்&oldid=3026154" இலிருந்து மீள்விக்கப்பட்டது