உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சு நாட்டுப்பண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லா மாசியேஸ்
La Marseillaise


 பிரான்சு தேசியம் கீதம்
எனவும் அறியப்படுகிறதுரைன் இராணுவ போர்ப் பாடல்
இயற்றியவர்க்ளாத் ஜோசஃப் த வில், 1792
இசைக்ளாத் ஜோசஃப் த வில்
சேர்க்கப்பட்டது1795
இசை மாதிரி
La Marseillaise
(Instrumental)

லா மர்சியேஸ் (La Marseillaise, (பிரெஞ்சு மொழி பலுக்கல் [la maʁsɛjɛz]]) என்பது பிரான்சு நாட்டின்  நாட்டுப்பண் ஆகும். இந்தப்பாடல் 1792 ஆண்டு க்ளாத் ஜோசஃப் த வில் என்பவரால் ஸ்திராஸ்பூர்க் நகரில் எழுதப்பட்டது. ஆஸ்திரியாவுக்கு எதிராக பிரான்சு போர் தொடுப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து இயற்றப்பட்ட பாடல் இது ஆகும். இந்தப் பாடலின் உண்மைப் பெயர் ரைன் இராணுவ போர்ப் பாடல் ( "Chant de guerre pour l'Armée du Rhin" ) என்பதாகும்.[1]

இந்தப்பாடல் ஒரு புரட்சிப்பாடல், விடுதலைப் பாடல், சர்வாதிகாரத்துக்கும் அந்திய ஊடுருவலுக்கும் எதிராக மக்களை ஊக்குவிக்கும் பாடல் என பெயர் பெற்றது. 1795 ஆம் ஆண்டு பிரெஞ்சு தேசியக் கூட்டம் இப்பாடலை முதல் பிரெஞ்சுக் குடியரசு பாடலாக ஏற்றுக்கொண்டது.[2] 1792 மே மாதம் மெர்சலைசிலிருந்து பிரஞ்ச்சு தலைநகரான பாரிசுக்கு வந்த தன்னார்வலர்கள் இப்பாடலை பாடியவாறே வீதிகளில் வலம் வந்தனர்.[3] அதிலிருந்து மார்சியேஸ் என்ற செல்லப் பெயரும் இந்தப் பாடலுக்கு ஒட்டிக்கொண்டது. ஐரோப்பிய நாட்டுப் பண்களில் உள்ள எழுச்சிநடை இசைக்கெல்லாம் இந்தப்பாடலே ஒரு முன்மாதிரி ஆகும். பிற நாட்டு நாட்டுப்பண்கள் தேசிய விழாக்கள், அரசு விழாக்கள் போன்றவற்றில் மட்டுமே இடம்பெறும், ஆனால் பிரஞ்சு நாட்டுப்பண் இந்த நாட்டின் மரபான செவ்வியல் இசையிலும், ஜனரஞ்சகமான இசையிலும் இடம்பிடித்துள்ளது என்பது இதன் சிறப்பு. இடையில் சிலகாலம் இந்தப்பாடல் நாட்டுப்பண் என்ற தகுதியில் இருந்து நீக்கப்பட்டது; பிரான்சின் முதலாம் நெப்போலியன் இந்தப்பாடலுக்கு பதில் வேறுபாடலை நாட்டுப்பண்ணாக வைத்திருந்தார். பத்தாம் லூயி, பதின்மூன்றாம் லூயி ஆகிய மன்னர்கள் இப்படலுக்கு தடைவிதித்தும் இருந்தனர். ஆனால் 1879 இல் மீண்டும் இப்பாடல் நாட்டுப்பண்ணாக அறிவிக்கப்பட்டு தற்போதுவரை இருந்துவருகிறது.

வரிகள்

[தொகு]

மிக நீண்டதான இப்பாடலின் முதல் பத்தி மட்டுமே பெரும்பாலும் பாடப்படுகின்றன. ( சிலசமயம் ஐந்தாவது ஆறாவது வரிகள் பாடப்படுகின்றன.) அந்த முதல் பத்தி பின்வறுமாறு

பிரஞ்சு மொழியில்[3] தமிழ் ஒலிபெயர்ப்பு தமிழ் மொழிபெயர்ப்பு[4]



Allons enfants de la Patrie,
Le jour de gloire est arrivé!
Contre nous de la tyrannie,
L'étendard sanglant est levé, (bis)
Entendez-vous dans les campagnes
Mugir ces féroces soldats?
Ils viennent jusque dans vos bras
Égorger vos fils, vos compagnes!

Aux armes, citoyens,
Formez vos bataillons,
Marchons, marchons!
Qu'un sang impur
Abreuve nos sillons!



ஆலன்ஸ் என்ஃபண்ட்ஸ் டீ லா பேட்ரீ

லா ஜோர் டீ க்ளோய்ர் எஸ்ட் அரைவ்

கான்ட்ர நோஸ் டீ லா டையரனீ..

லீடன்டார்ட் சங்க்லான்ட் எஸ்ட் லெவி..

என்டன்டஸ் வோ.. டான்ஸ் லாஸ் கேம்பன்ஸ்

முகிர் ஸெஸ் ஃபெரொசஸ் சால்டாட்ஸ்

ஈஸ் வியனென்ட் ஜஸ்க் டான்ஸ் வோஸ் ப்ராஸ்

எகோர்ஜர் வாஸ் ஃபில்ஸ் வாஸ் கேம்பன்ஸ்.

ஆக்ஸ் ஆர்ம்ஸ் சிடியோன்ஸ்

ஃபார்மஸ் வாஸ் பெடாலிய்ன்ஸ்

மார்ச்சான்ஸ் மார்ச்சான்ஸ்

க்யூன் சங் இம்ப்பர்

அப்ரூவே நாஸ் சிலான்ஸ்.



தந்தை நாட்டின் பிள்ளைகளே எழுந்திருங்கள்

மகிமையின் நாள் வந்தடைந்துவிட்டது.

நமக்கு எதிராக, வல்லாட்சியின்

கொடூரப் பதாகை உயர்த்தப்பட்டிருக்கிறது.

அந்த வெறி கொண்ட வீரர்களில் உறுமல்

நமது நாட்டுப்புறங்களில் கேட்கின்றதா?

உங்கள் பிள்ளைகள், மகளிரின் குரல் வளையைத் துண்டிக்க அவர்கள் உங்களுடைய கரங்களுக்குள் வந்துவிட்டார்கள்.

ஆயுதங்கள் எடுங்கள், குடிமக்களே,

நமது படைகளாய் உருவாக்குவோம்.

நடை போடுவாம்! நடை போடுவோம்!

தூய்மையற்ற (எதிரிகளின்) குருதியில்

நமது களங்கள் மூழ்கட்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Weber, Eugen (1 June 1976). Peasants into Frenchmen: The Modernization of Rural France, 1870–1914. Stanford University Press. p. 439. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-1013-8. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
  2. Wochenblatt, dem Unterricht des Landvolks gewidmet, Colmar 1792 [1] பரணிடப்பட்டது 2017-06-30 at the வந்தவழி இயந்திரம்.
  3. 3.0 3.1 étrangères, Ministère de l'Europe et des Affaires. "The Marseillaise". France Diplomacy - Ministry for Europe and Foreign Affairs (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-01.
  4. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (24 ஆகத்து 2016). "பிரெஞ்சு தேசத்தின் எழுச்சிப் பாட்டு!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 24 ஆகத்து 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சு_நாட்டுப்பண்&oldid=3703709" இலிருந்து மீள்விக்கப்பட்டது