உள்ளடக்கத்துக்குச் செல்

பிராங்கு ஆர்த்தர் பெல்லாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராங்கு ஆர்த்தர் பெல்லாமி
Frank Arthur Bellamy
பிறப்பு17 அக்தோபர் 1863
ஆக்சுபோர்டு, ஐக்கிய இராச்சியம்
இறப்பு15 பெப்ரவரி 1936(1936-02-15) (அகவை 72)
ஆக்சுபோர்டு, ஐக்கிய இராச்சியம்
தேசியம்ஐக்கிய இராச்சியம் பிரித்தானியர்

பிராங்கு ஆர்த்தர் பெல்லாமி (Frank Arthur Bellamy) (17 அக்தோபர் 1863 – 15 பிப்ரவரி 1936) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் தன் ஒன்றுவிட்ட உடன்பிறப்பான எத்தேல் பெல்லாமியுடன் இணைந்து வான்வரை அட்டவணைகளில் பணிபுரிந்தார்.

வாழ்க்கை[தொகு]

பிராங்கு பெல்லாமி 1863 இல் ஆக்சுபோர்டு, புனித ஜான் தெருவில் மாந்தேகு பெல்லாமிக்கு மகனாகப் பிறந்தார்.

இவர் ஆக்சுபோர்டு மகதலின் கல்லூரியின் பள்ளியில் பயின்றுள்ளார். இவர் தன் பதினெட்டாம் அகவைக்கு சில மாதங்களுக்கு முன்பு, 1881 ஜூலையில் இராடுகிளிப் வான்காணகத்தில் இரண்டாம்நிலை உதவியாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இப்பதவியில் முன்பு இவரது அண்ணன்களான பிரெடெரிக்கும் காரியும் இருந்துள்ளனர்.

பெல்லாமி பிரித்தானிய வானியலாளராகி, எத்தேல் பெல்லாமி எனும் தன் ஒன்றுவிட்ட உடன்பிறப்புடன் இணைந்து வான்வரை அட்டவணைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். இவர்கள் இருவரும் இணைந்து 1,000,000 எண்ணிக்கைக்கும் மேலான விண்மீன்களின் தரவுகளை ஒளிப்பட நுட்பம் வழியாகப் பதிவு செய்தனர். இவர் அரசு வானிலையியல் கழகத்தின் ஆய்வுறுப்பினராக 1883 மே 16 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 1896 பிப்ரவரி 14 இல் அரசு வானியல் கழகத்தின் ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இறுதியாக இவர்1933, திசம்பர், 27 இல் பிரித்தானிய வானியல் கழகத்தில் சேர்ந்தார்.[3]

பெல்லாமி 1890 இல் நிறுவப்பட்ட ஆக்சுபோர்டு அஞ்சல்வில்லைக் கழகத்தின் நிறுவல் செயலாளராகவும் பொருளாளராகவும் விளங்கினார். இவர் இந்த இரு பதவிகளிலும் தன் இறப்புவரை தொடர்ந்து இருந்துள்ளார்.[4]

இவரும் இவரது நெருங்கிய உறவினரான எத்தேல் பெல்லாமியும் 1930 இல் ஆக்சுபோர்டு, வின்செசுட்டர் சாலை, 2 ஆம் இலக்க இல்லத்துக்குச் சென்று வாழலாயினர். அங்கு, இதற்கான நீலநிறப் பட்டயம் ஒன்று இவர்களது நினைவாக நிறுவப்பட்டுள்ளது.[5]

இவர் 1936 இல் தன் பிளாசுகெட்டு எனும் நண்பரோடு கீழே விழுந்து அடிபட்டாதால், ஆக்சுபோர்டு, வின்செசுட்டர் சாலை, 2 ஆம் இலக்க வீட்டில் இறந்தார். இவர் பலகாலம் தன் ஒன்றுவிட்ட உடன்பிறப்புடன் பணிபுரிந்தாலும் தன் இறுதிக் காலச் செல்வம் முழுவதையும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கே எழுதி வைத்தார். இது குடும்பத்தினை விட சமூகத்துக்கே இவர் பெருமதிப்பு தந்ததைக் காட்டுகிறது. ஆனால், எத்தேல் பெல்லாமியின் நிதி, இவர் தன் சொத்தில் ஒருபகுதியை விற்க நேர்ந்தபோதெல்லாம் இவருக்கு உதவியுள்ளது.[2]

இவர் ஆக்சுபோர்டில் உள்ளபுனித செப்புல்கர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[6]

அஞ்சல் வில்லை வெளியீடுகள்[தொகு]

  • ஆக்சுபோர்டு, கேம்பிரிட்ஜ் கல்லூரி தூதுவர் அஞ்சல் வில்லைகள், அட்டைகள் உறைகள் 1871-86. 1921.
  • ஆக்சுபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பயன்படுத்தும் கல்லூரி தூதுவர் அஞ்சல் வில்லைகள், அட்டைகள் உறைகள் சுருக்கமான பதிவேடு, 1871முதல் 1895 வரையிலானதும்  ; 1859 முதல் 1885 வரையில் ஆக்சுபோர்டு தொழில் ஒன்றியக் கழகம் பயன்படுத்திய அஞ்சல்வில்லைகளும், 1925.
  • PCGB வரலாறு 1909-12. (ஜே. ஜே. தார்லோவுடன் இணைந்து)

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Fellows of the Royal Meteorological Society (1900)" (PDF).{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. 2.0 2.1 உரோஜர் கட்சின்சு, ‘பெல்லாமி, பிராங்கு ஆர்த்தர் (1863–1936)’, ஆக்சுபோர்டு தேசிய வாழ்க்கை அகரமுதலி, ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அச்சகம் , 2004 இணையப் பதிப்பு, ஜனவரி 2008 accessed 24 July 2015
  3. "1934JBAA...44..131. Page 131". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
  4. BELLAMY, Frank Arthur FRAS 1864-1936. பரணிடப்பட்டது 2011-07-13 at the வந்தவழி இயந்திரம் in Who was who in British Philately, The Association of British Philatelic Societies. Retrieved 21 September 2016.
  5. http://www.oxonblueplaques.org.uk/plaques/bellamy.html Oxfordshire Blue Plaques Board: Frank & Ethel Bellamy, accessed 8 October 2019
  6. Grave of Frank Arthur Bellamy, retrieved 15 August 2018