பிரம்மீஸ்வரன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரம்மீஸ்வரன் கோயில் என்பது தென்னிந்தியாவிலுள்ள, கேரள மாநிலத்தில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து கோவிலாகும். இது பாலக்காடு நகரத்திலிருந்து 25 கி.மீ. தூரத்தில் கரிம்புழா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது [1]

பழைய கோவிலானது சிறிது காலம் அதாவது 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை கவனிக்கப்படாமல் இருந்தது. கரிம்புழாவில் உள்ள சாலப்புரத்து தரவாடை சேர்ந்த ஒரு நாயர் குடும்பம், சிவனை வணங்க வந்துள்ளது. இக்குடும்பம் இவ்வாலயத்தை புதுப்பித்தது. இப்பணி முடிவடைய கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆனது. சாலப்புரத்துக் குடும்பத்தின் உறுப்பினர்களில் தொழிலதிபரான திரு. ஜி. ஜி. மேனன் என்பவரும் புகழ்பெற்ற மலையாள சினிமா கலைஞரான திரு ரவி மேனன் என்பவரும் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மீஸ்வரன்_கோயில்&oldid=3621253" இலிருந்து மீள்விக்கப்பட்டது