பிரபாகர் கோன்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரபாகர் கோன்கர்
கோவாவின் சட்டமன்ற உறுப்பினர
பதவியில்
சூன் 1999 – 2002
முன்னையவர்பாண்டு நாயக்
பின்னவர்வாசுதேவ் கோன்கர்
தொகுதிசாங்க்யும் சட்டமன்றத் தொகுதி
பெரும்பான்மை3,498 (28.79%)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிரபாகர் பாண்டுரங் கோன்கர்

(1964-04-04)4 ஏப்ரல் 1964
சாங்க்யும், கோவா (மாநிலம்), இந்தியா
இறப்பு14 செப்டம்பர் 2012(2012-09-14) (அகவை 48)
சிரோடா, கோவா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (1999–2002)
துணைவர்சுனந்தா கோன்கர்
பிள்ளைகள்2
வேலைஅரசியல்வாதி

பிரபாகர் பாண்டுரங் கோன்கர் (Prabhakar Pandurang Gaonkar) (4 ஏப்ரல் 1964 - 14 செப்டம்பர் 2012) கோவாவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோவா சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்தார், 1999 முதல் 2002 வரை சாங்க்யும் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். [1] [2]

தொடக்க கால மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பிரபாகர் பாண்டுரங் கோன்கர் கோவாவில் உள்ள சாங்க்யுமில் பிறந்தார். இவர் தனது உயர்நிலைப் பள்ளி இறுதிப்படிப்பினை முடித்தார். இவர் சுனந்தா கோன்கரை மணந்தார், இத்தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருந்தனர்.

தொழில் வாழ்க்கை[தொகு]

1999 ஆம் ஆண்டு கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் சாங்க்யும் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோன்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சத்யவான் பத்ரு தேசாயை 787 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இறப்பு[தொகு]

சிரோடாவில் உள்ள காமாக்சி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சில நாட்கள் கோன்கர் சிகிச்சை பெற்று வந்தார். 14 செப்டம்பர் 2012 அன்று, கோன்கர் ஒரு சிறிய நோயால் இறந்தார். இதையடுத்து அவரது இறுதிச் சடங்குகள் மறுநாள் நடைபெற்றது.

எதிர்வினைகள்[தொகு]

இவரது மரணத்திற்கு கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இரங்கல் தெரிவித்ததுடன், கரும்பு விவசாயிகள் மற்றும் சலாலிம் அணை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் உட்பட பல பிரச்சினைகளை கோன்கர் எழுப்பியதாகக் கூறினார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Goa Legislative Assembly". பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
  2. "Prabhakar Gaonkar, former BJP MLA from Sanguem, passed away after a brief illness, on Friday afternoon. He was 46". பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
  3. "Ex-Sanguem MLA Gaonkar dies at 46" (in ஆங்கிலம்). September 15, 2012. பார்க்கப்பட்ட நாள் 2022-11-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபாகர்_கோன்கர்&oldid=3817979" இலிருந்து மீள்விக்கப்பட்டது