சாங்க்யும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாங்க்யும் (Sanguem) நகரம் இந்தியாவின் கோவா மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்கா, சாகமேஷ்வர் கோயில் மற்றும் சலாயுலிம் அணை ஆகியவை அமைந்துள்ளன.

அமைவிடம்[தொகு]

இதன் அமைவிடம் 15°14′N 74°10′E / 15.23°N 74.17°E / 15.23; 74.17 ஆகும்.[1] இது கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கட்டொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்டொகை 6,158 பேர் ஆகும்.[2] இங்கு ஆண்கள் 51% உம் பெண்கள் 49% உம் உள்ளனர். இந்நகரின் கல்வியறிவு 75% ஆகும். ஆண்களின் கல்வியறிவு 81% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 69% ஆகவும் உள்ளது. மக்கட்டொகையில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 6% ஆவர். கொங்கணி, கன்னடா என்பன இங்கு பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Sanguem
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்க்யும்&oldid=2916276" இருந்து மீள்விக்கப்பட்டது